நீராடி (குளித்து) துவட்டும் முறை : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
நாம் குளிக்கும் பொழுது , உடலில் நீர் பட்டவுடன் , நம் உடலில் உள்ள தேவதைகள் அனைத்தும் வெறியேறிவிடும்.
குளிக்கும் போது நம் முன் அனைத்து தேவதைகளும் (மூதேவி உட்பட) அமர்ந்துதிருப்பார்கள்.
எங்கேயும் மூதேவிக்குத்தான் முதலிடம் . எனவே குளித்துவிட்டு எந்த இடத்தில் துணி வைத்து துவட்டுகிறோமோ , அந்த இடத்தில் மூதேவி வந்து அமர்ந்து கொள்வாள்.
எனவேதான் நம் முன்னோர்கள் குளித்து முடித்தவுடன் முதலில் முதுகை துவட்டி " மூதேவியே முதுகுக்குப் போ " என்று கூறி துடைப்பர்.
இதற்கு முன்னோர்கள் ஒரு கதையும் கூறுவர்.
நம் உடலில் அனைத்து தேவதைகளும் (ஸ்ரீதேவி , மூதேவி உள்ளிட்டோரும் ) நாம் குளிக்கும் முன்பு நம் உடலில் அமர்ந்திருப்பர்.
நாம் குளிப்பதற்காக நம் உடலில் தண்ணீரை ஊற்றும் பொழுது இருவரும் (ஸ்ரீதேவி , மூதேவி ) முதலில் வெளியேறுவர்.
பின் குளித்து முடித்தவுடன் நம் உடலில் யார் முதலில் போய் அமர்வது என்ற போட்டி வரும்.
இப் போட்டிக்கு தீர்வு காண இருவரும் பிரம்மனிடம் செல்கின்றனர் பிரம்மன்
குளித்து முடித்தவுடன் எந்த இடத்தில் துணியால் துடைக்கிறானோ அந்த இடத்தில் மூதேவி அமர்த்து கொள்ளவேண்டும்.
பிறகு ஸ்ரீதே மற்ற இடங்களில் அமர வேண்டும் என்று முடிவைக் கூறினார்.
குளித்து முடித்தவுடன் பலர் முகத்தைத் தான் துடைப்பர். எனவே மூதேவிக்கு முதலிடம் என்பதால் மூதேவி முகத்தில் வந்து அமர்ந்து கொள்வாள்.
இதனால் முகம் களை இழந்தும் , சோம்பலாகவும் இருக்கும். எனவே முதுகை முதலில் துவட்டி மூதேவியே முதுகிற்கு விரட்ட வேண்டும்.
இதனையே படம் விளக்குகிறது.
இது ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டது.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home