முத்திரை விஞ்ஞானம் :
முத்திரைகள் என்பது நமது கை விரல்களால் செய்யக்கூடிய எளிய பயிற்சி முறைகளாகும். மனித குலம் தோன்றி 2,50,000 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சுமார் 20,000 வருடங்களுக்கு முன்னரே பேச்சு மொழி உருவாகியது. எழுத்து வடிவம் 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவானது. 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் சைகைகளாலேயே தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
இந்த சைகை மொழியின் நீட்சியாகவே முத்திரைகள் உருவாகின. நமது புராணங்களில் ஒரு கதை உள்ளது. கலைகள் அனைத்திற்கும் மூல கர்த்தாவாக இருப்பவர் நந்திதேவன். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பிரம்மி , இளையவள் சுந்தரி. மூத்த மகளுக்கு மொழியை நந்திதேவர் கற்றுக் கொடுத்தாராம். (அதிலிருந்து உருவாதைே பிரம்மி மொழி).
இளைய மகளான சுந்தரிக்கு ஆடல், பாடல், முத்திரைகள், பாவனைகள் போன்ற நூண்கலைகளை நந்திதேவர் கற்றுக்கொடுக்க, அவள் வழியாக உலக மக்கள் இந்தக் கலைகளைக் கற்றுக் கொண்டார்கள்.
இது ஒரு புராணக் கதைதான். முத்திரைகள் குறித்த மிகப் பழமையான நூல்கள் அனைத்திலும் இதை ' முத்திரை விஞ்ஞானம் (Mudra vigyan) என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆம் : முத்திரைப் பயிற்சிகளை ஒரு கலை என்று சொல்வதைவிட 'விஞ்ஞானம் ' எனக் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். மிக உயர்ந்த விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான விஞ்ஞான முறையே இந்த முத்திரைகள் !

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home