Tuesday, 24 November 2015

சிறப்பாக வாழ செய்ய வேண்டியவையும், செய்யத்தகாதவையும்.

* ஒருவர் நோயற்று வாழ, சீரான வாழ்க்கை முறையையும், சரிவிகித உணவையும் கடைபிடிக்க வேண்டும்.
        
* ஒருவர் எப்போதும் சூரிய உதயத்திற்கு முன்பே எழவேண்டும். தூங்கும் போது அறை இருட்டாக இருக்க வேண்டும். அறை வெளிச்சமாக இருந்தால், நாம் கண்ணை இறுக்கி மூடிக் கொள்வோம். இது மூளையை பாதிக்கும். அதனால் தலை பாரமாகி நாள் முழுவதும் எரிச்சலடைந்து இருப்பர்.

*  இந்த ஆங்கில பழமொழியை நினைவு கூறவும். "Early to bed and early to rise makes a person healthy , Wealthy and wise".

* ஒருவர் விரும்பத்தகாத எண்ணங்களுடன் காலையில் எழுந்திருக்கக்கூடாது. அது நாள் முழுவதும் சோர்வடையச் செய்யும். எனவே நல்ல எண்ணங்களுL னும், கடவுள் பெயரை உச்சரித்துக் கொண்டும் காலையில் எழுவது சிறந்தது.

* ஒருவர் கண் விழித்த உடனே படுக்கையில் இருந்து எழக்கூடாது. மாறாக படுக்கையிலேயே 10-15 வினாடிகள் அமர்ந்திறந்தபின் எழுந்திருக்க வேண்டும். இல்லையெனில் உடலின் சீரமைப்பு கெடும்.

* குளிர்காலத்தில் ஒருவர் படுக்கையிலிருந்து எழும்பொலழுது (காலை , மாலை , எந்த வேளையிலும்)  அவரது பாதம் நெரடியாகத் தரையில் படக்கூடாது. செருப்பு அணிந்து கொள்ளலாம் அல்லது எழுந்த பின் 5 நிமிடங்கள் கழித்து தரையில் காலை வைக்கவும். இல்லையெனில் சளி பிடித்து சைனஸ் உண்டாகும் வாய்ப்பு நேரிடும்.

* ஒருவர் காலையில் எழுந்த உடனேயே தண்ணிர் குடிக்காமல் 5 நிமிடங்கள் கழித்தே குடிக்க வேண்டும்.

* காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கும், காலை உணவு அருந்துவதற்கும் இடையில் 45 நிமிடங்கள் இடைவெளி இருக்கவேண்டும். குளிர்ந்த நீரில் குளித்தபின் இரத்த ஓட்டம் குறைந்து உடல் தளர்ந்து இருக்கும். அரப்பிகளும், தசைகளும் கூட மெதுவாகச் செயல்படும். சுரப்பிகள், தசைகள் மற்றும் அனைத்து உடல் உறுப்புகளும் உஷ்ணமாகி தங்கள் வேளைகளைத் தொடர 45 நிமிடங்கள் ஆகும். எனவே அந்த நேரத்தை கடவுள் பிரார்த்தனைக்கும், தியnனத்திற்கும் செலவிடலாம். இந்த கால இடைவெளியை கடைப்பிடிக்கவில்லையெனில் வாயுத் தொல்லைகள் ஏற்படும். முதலில் குளிப்பது பிறகு உண்பது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

* இரவில் உணவு அருந்துவதற்கும் தூங்குவதற்கும் இடையே குறைந்த பட்சம் இரண்டு மணிநேரம் இடைவெளி இருக்கவேண்டும. இந்த நேரத்தில் உடல் உழைப்பு செய்வது அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும்.

* ஒருவர் படுக்கையில் தூங்குவதும், எழுவதும் தவறான முறையாக இருப்பின் அது பல நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். எப்பொழுதும் இடது அல்லது வலது பக்கவாட்டில் திரும்பி இரண்டு கால்களையும் மடித்து கைகளை ஊன்றி படுக்கவோ, எழுந்திருக்கவோ வேண்டும். ஒருவர் பக்கவாட்டில் திரும்பாமல் நேராகப் Uடுத்து எழுந்தால் இரைப்பை சுரப்பிகள் மேல் நோக்கி இழுக்கப்படும். இது ஆஸ்துமா, சர்க்கரை நோய், மாரடைப்பு, முதுகு வலி போன்ற நோய்களை உண்டாக்கக்கூடும்.

* ஒருவர் படுக்கும்போது உடல்வலி ஏற்படாதவாறும், சவுகரியமாகவும் படுக்க வேண்டும். தூக்கத்தின்போது நமது மூளை, நரம்புகள், தசைகள், சுரப்பிகள் மற்றும்அனைத்து உடலுறுப்புகளும் பல மணிநேர வேலைக்குப்பின் மெதுவாகச் செயல்படத் துவங்கும் . உடலையும் மனதையும் தளர்வாக்கிக்கொண்டு தூங்குவதினால் காலையில் சுஜசுஙப்பாக எழ முடியும். படுக்கும் போது கைகளை தலைக்கு மேலே அல்லது தலையின்  கீழே வைத்துக் கொண்டு படுக்கக்கூடாது. அவ்வாறு செய்வதினால் கழுத்தெலும்பு பாதிக்கப்பட்டு கழுத்து வலி, முதுகுத்தண்டு வலி போன்றவை உண்டாகும். திருமணமாகாத பெண்கள் தங்கள் கால்மேல் கால் போட்டுத் தூங்கக்கூடாது. இதனால் வெள்ளைபடுதல் மற்றும் முறையில்லா மாதவிடாயும் உண்டாகும்.

* நாம் வெளியேற்றும் கரியமில வாயு (CO 2) அறையை விட்டு வெளியேறும் படியாக அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும். இல்லையெனில் தலை பாரமாகி நாள் முழுதும் நம்மை சோர்வடையச் செய்யும். தூங்கும் போது காற்றோட்டம் தடையில்லாமல் இருக்கவேண்டும். நாம் வெளியேற்றும் உஷ்ண வாயு மிகவும் லேசாக இருப்பதால் அது வெளியேறவும், குளிர்ந்த காற்று உள்ளே வருவதற்கும் ஒரு ஜன்னல் கூட போதுமானது.

* ஒருவர் சிறுநீர் மற்றும் மலம் கழிக்காமல் வெகு நேரம் இருக்கக்கூடாது. உடல் ஆரோக்கியி மாக இருக்க அவ்வப்போது சிறுநீர் மற்றும் மலம் கழித்து சிறுநீரகத்தையும் பெறுங்குடலையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு குடிநீருக்கே முதற் பங்கு 50% நோய்கள் உண்டாக குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதே ஆகும். ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 8 - லிருந்து 10 தம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த செயற்கையான குளிர்பானங்களும் குடிநீருக்கு ஈடாகாது.

* தர்பூஸ் அல்லது எந்தப் பழத்தை உண்ட பிறகும் 10-15 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்கக் கூடாது. இல்லையெனில் அது காய்ச்சல் உண்டாக்கக் கூடும்.

* தேனீர் அல்லது காபி குடித்தவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது. அப்படிக் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். எனவே 10 லிருந்து 15 நிமிட இடைவெளி இருக்க வேண்டும்.

* ஒருவர் குறைந்தபட்சம் 8-10 தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் சீததோசனத்திற்க்கு ஏற்றவாறு. தண்ணீர் எந்தக் கலப்படமும் இல்லாதிருந்தால் மட்டுமே அது அனைத்து செல்களுக்கும் "ஆங்மோஸிஸ் "  முறையில்  (OSmosis) சென்றடையும். அதே சமயம் உணவு சிரியான முறையில் ஜீரணமாக வேண்டுமென்றால் உணவின் இடையில்  தண்ணீர்  குடிக்கக்கூடாது. ஏனெனில் தண்ணீர் ஜீரணத்திற்குத் தேவையான அமிலங்களை நீர்த்துவிடும். எனவே உணவருந்தி 1/2 மணி நேரம் கழித்த பின்னரே நீர் அருந்தவேண்டும். உச்சி வெயிலில் நடந்து வந்த உடனேயே குளிர்சாதனப் பெட்டியிலிருக்கும்  குளிர்ந்த தண்ணீரை குடிக்கக் கூடாது. சாதாரண நீரையே குடிக்கவேண்டும்.

* எப்போழுதும் அமர்ந்தே தண்ணீர் குடிக்க வேண்டும். நின்றபடியே தண்ணீர் குடிப்பதால் கணுக்காலில் வலி ஏற்படும். மேலும் மிகவும் இனிப்பான நீர்பானங்கள் அருந்தினால், தண்ணீர் நேரே குடற்பதையில் இழுக்கப்படும். இதனால் உடற்பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்படும்.

* பாத்திரங்களில் சேமித்து வைக்கப்பட்ட நீரில் நீர்குமிழிகள் காணப்படுவது தண்ணீர் மாசடைந்து விட்டதைக் குறிக்கிறது.

* வயிற்றுப்போக்கின் போது வெறும் நீரைக் குடிக்காமல் அதில் சிறிது உப்பும், சர்க்கரையும் கலந்து குடிக்க வேண்டும். வெறும் நீர் வயிற்றுப் போக்கை அதிகரிக்கும். வெறும் உப்பை மட்டும்  சேர்த்து குடித்தாலும் வயிற்றுப் போக்கு அதிகரிக்கும்.

* பருவகாலத்திற்கேற்ப பழங்களையும், காய்கறிகளையும் உண்ண வேண்டும். மாம்பழம் போன்ற பழங்கள் வெப்ப காலத்தில மட்டுமே கிடைப்பது இயற்கையாகும். பதப்படுத்தப்பட்ட பழங்களும் காய்கறிகளும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பருவகாலம் மாறும்போது (கோடை காலத்திலிருந்து குளிர்காலம்) நமது உடலின் இரசாயனங்களும் காலத்திற்கேற்ப மாறுபடும். எனவே பதப்படுத்தப்பட்ட பழம் மற்றும் காய்கறிகள் நமது உடலில் இரசாயனமாற்றத்தை ஏற்படுத்தி நோய்களை உண்டாக்கும்.

* உணவை நன்கு மென்று உண்ணாது, அவசரமாக உண்பவன் அதிக எடை போடுவான். எப்போழுதும் உணவை மெதுவாகவும், உமிழ்நீர் உணவில் நன்கு கலக்கும்படியாக  உணவை நன்கு மென்று கடித்து உண்ண வேண்டும். நன்றாக மென்று உண்ணப்படும் உணவு சுலபமாக ஜீரணமாவது மட்டுமல்லாமல் உடல் பருமனாகாமல் இருக்கவும் உதவுகிறது. ஏனெனில் உணவை மென்று உண்பதால் சீக்கிரமாகத் திருப்தி அடைந்து குறைந்த உணவையே உண்பர்.

* குழந்தைகளை நீராட்டும் போது முதலில் தலையில் சிறிது தண்ணீரை ஊற்றி (காதுகளை விடுத்து ) பின்னர் தோற்களில் ஊற்ற வேண்டும். இதன்பிறகு தலையில்  அதிக நீரை ஊற்ற வேண்டும். இல்லையெனில் தலை உடனடியாக குளிர்ந்து குழந்தை பெருமூச்சு விட்டு நீரையும் உள்ளே இழுத்துவிடும். இது பெரியவர்களுக்கும் பொருந்தும்.

* காதுகளிலிருந்து அழுக்கை எடுக்கக்கூடாது. காதுகளில் ஒரு சொட்டு எண்ணெய் கூட ஊற்றக் கூடாது. அழுக்கெடுக்க உதவும் பங்சுகளையும் (Buds) உபயோகிக்கக்கூடாது. ஆன்டிபயாடிக்ஸ், நிகோடின், அதிக அளவில் காபி குடித்தல் போன்றவை காதை செவிடாக்கக் கூடும்.

* தசைப்பிடிப்பு ஏற்பட்டால் இரண்டு கைகளையும்  தலைக்கு மேல் உயர்த்தி 15-20 வினாடிகளுக்கு விரல்களால் சொடுக்கு போட்டால் வலி விரைவில் குறைந்துவிடும்.

* காய்ச்சலின் போது ஒருவர் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது.  அது காய்ச்சலை அதிகரிக்கும். உடலுறவிற்கு பிறகு உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது.  அதற்கு பதிலாக சர்க்கரை கலந்த வெதுவெதுப்பான பாலை குடிக்கலாம். உணவு உண்பதற்கும் உறவுக்கும் இடையே 2 மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். ஏனெனில் நாம் உண்ணும் திட உணவு கூழாக மாற 2 - 3 மணி நேரம் ஆகும்.

* மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு இருக்கும் பெண்கள் அதிக அளவில் பால் குடித்து வந்தால் இரத்தப்போக்கு குறையும். ஆனால் மிகவும் சூடான பாலை அருந்தினாலும் இரத்தப் போக்கு அதிகரிக்கும். மிகவும் குளிர்ந்த பாலையும் குடிக்கக்கூடாது.

* குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் ஒரே வேளையில் அதிகமான நீரைக் குடிக்கக் கூடாது.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
           
            
              
        

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home