Sunday, 10 January 2016

வாஸ்து முறைகளிலும் பரிகாரம் உண்டு : இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்

இவ்வுலகில் , மக்கள் வாயை கட்டி, வயிற்றைக் கட்டி ,கடனை வாங்கி வீடுகட்டுகிறார்கள். ஆனால் நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை சுற்றிப் பார்த்து விட்டு வாஸ்து சிரியில்லை, இந்தந்த பக்கத்தை இடிக்க வேண்டும் என்கிறார்கள். பணம் இருப்பவர்கள் அவர்கள் சொன்னபடி வீட்டை இடித்துக் கட்டுகிறார்கள். ஆனால் பணம் இல்லாதவர்கள் கடனை வாங்கி கட்டிய வீட்டை எவ்வாறு இடித்துக் கட்ட முடியும். அவ்வாறு வீடு இடித்துக் கட்டாமல் இருப்பதற்கு வழி உண்டா?

          ஒவ்வொரு வீடுகளுக்கும் அதற்கு கட்டக்கூடிய அமைப்பின்படி அதற்கு வயது உண்டு. நாம் ஒரு கல்லைச் சிலையாக செய்ய வேண்டும் என்றால் கூட அந்த கல்லை ஆண் கல்லா , பெண் கல்லா என்று பார்க்க வேண்டும். ஆண் கல் என்றால் கல் மதம் வரும். பெண் கல் என்றால் கல் பிசின் வரும். அலித்தன்மை உள்ள கல்லுக்கு கல் மதமும், கல் பிசினும் வரும். இவ்வாறு கல்லில் மூன்று வகைகள்  உண்டு. பெண் கல் என்றால் பெண் சிலையாக வடிக்க வேண்டும். ஆண் கல் என்றால் ஆண் சிலையாக வடிக்க வேண்டும். சிற்பி கல் சிலையை செதுக்கும் பொழுது அவருடைய கால்கள் சிலையின் எந்த பாகத்திலும் படலாம். சிற்பி உருவத்தை முழுமையாக செதுக்கிவிட்டு கை விரல்களில் நான்கை மட்டும் செதுக்கி பின் கண்களை திறந்து விட்டால் சிலைக்கு உயிர் உண்டாகிவிடும். அதற்குபின் சிற்பியின் கால்கள் சிலையின் மேல் படக்கூடாது. பின் ஆகா ! நான்கு விரல்தான் செதுக்கக் கூடாது. ஏன் என்றால், கண்ணை திறந்து விட்டால் அந்த சிலைக்கு உயிர் வந்துவிடும். அதே போல் தான் வீடுகளும் . வீட்டிற்கு புரோகிதர்களை அழைத்து வந்து , யாகம் வளர்த்து பால் காய்ச்சி , பசுமாட்டை கொண்டு வந்து வாஸ்து புருஷன் எப்படி எழுந்து வலது புறம் திரும்பிநிற்கின்றானோ, அதே போல் மாட்டை வலதுபுறம் மூன்று முறை சுற்றவைத்து மாட்டை விட்டுக்குள் அழைத்து வந்து பொங்கல் வைத்து மாட்டுக்குக் கொடுத்து, மாடும் மகிழ்ந்து அனைவரும் மகிழ்ந்து கட்டிய வீட்டை எப்படி இடித்து ஒச்சப்படுத்துவது . யாகம் வளர்த்து பால் காய்ச்சி விட்டால் வீட்டுக்கு உயிர் உண்டாகி விடும். அப்படி உயிர் உள்ள விட்டை எப்படி ஒச்சப்படுத்துவது. விதி என்று இருந்தால் மதி என்று ஒன்று இருக்கும். ஜாதகம் பார்த்தால் எவ்வாறு பரிகாரம் கூறுகிறார்களோ , அதே போல் வாஸ்து முறைகளிலும் பரிகாரம் உண்டு. அது எவ்வாறென்று கூறுகிறேன்.

                மயனுக்குப் பிடித்தது மாமரம். மா மரத்தின் பதினொறு இலையை வளர்பிறையில் சினிக்கிழமை அன்று கட்ட வேண்டும். இந்த சனிக்கிழமை கட்டினால் அடுத்த சனிக்கிழமை கழட்டிவிட வேண்டும். இப்படி ஒரு ஆண்டிற்கு கட்டினால் 100 வருடம் வரை அந்த வீட்டிற்கு உயர் உண்டாகிவிடும். அதிகமாக கஷ்டம் இருந்தால் 108 இலையை அதே போல் ஒரு ஆண்டிற்கு கட்டிவர கஷ்டம் அகன்று நன்மை உண்டாகும். ஆகையால் மங்களகரமாக இருக்க '' மா" இலையை கட்டி வருகிறார்கள். மா இலையை கட்டினால் மங்களகரமான ஐஸ்வர்யங்கள் உண்டாகும். மா இலையை ஏன் கட்டுகிறோம் என்று தெரியாமலேயே கட்டுகிறார்கள். இதுவே மா இலை கட்டுவதற்கு காரணம் . வீட்டுமனைபடியில் குறைபாடு இருந்தால் அனைத்தையும் குறைப்பது மாஇலைதான்.

              ஒரு கண் உள்ள நாளில் கட்டிய மனையானது ஒரு கண் மனையாகும். இதன் பலன் என்னவென்றால் பொருள் வரவு . வாழ்வு, இன்பம், நோய், தனக்சேர்க்கை , உறவினர் நட்பு , முதலியவை சம அளவில் கூடுதல் குறைவின்றி பொதுவாக இருக்கும். அவ் வீடு உத்தமமான பலனையே தரும். இரு கண் உள்ள நாளில் விடு கட்டினால் அவ்வீடு நீண்ட காலம் நிலைத்திருக்கும். இரு கண்ணும்  இல்லாத குருட்டு நாளில் வீடு கட்டினால் அது தீயதாகும். சுற்றத்தாரின் பகை உண்டாகும். அவ்வீடு பாழாகிப் போகும்.

               ஒரு கண் உள்ள நாட்கள் ஞாயிறு ,  திங்களாகும். இரு கண் உள்ள நாட்கள் புதன், வியாழன், வெள்ளியாகும். இரு கண்ணும் இல்லாத குருட்டு நாட்கள் சனி , செவ்வாய் ஆகும்.

              நாம் தெற்கு திசையில் குடியிருக்கிறோம் என்றால், அங்கு நம் குடும்பத்திற்கு அதிக கஷ்டம் ஏற்படும் பொழுது அந்த வீட்டிற்கு வடக்கு திசையில் குடிபோனால் நன்மையை கொடுக்கும் . அந்த வீட்டிற்கு தெற்கே குடி சென்றால் மிகக் கடுமையான கஷ்டங்களைக் கொடுக்கும். அதே போல் மேற்கு திசையில் குடியிருக்கிறோம்  என்றால் குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது என்றால், நம் வீட்டிற்கு கிழக்கு நோக்கி குடிபுகலாம். நம் வாழ்க்கைக்கு வாழ்வு உண்டு. அதே சமயம் வீட்டிற்கு கிழக்கில் இருந்து மேற்கே ஒருபோதும் குடிபுகக்கூடாது.

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை  சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                          
                           * * * * * * *

               

2 Comments:

At 11 January 2016 at 17:08 , Blogger Unknown said...

வணக்கம். வார கிழமைகள, எப்படி அறிவது. காலண்டர் அச்சிடாத காலத்தில்.

 
At 11 January 2016 at 17:09 , Blogger Unknown said...

வணக்கம். வார கிழமைகள, எப்படி அறிவது. காலண்டர் அச்சிடாத காலத்தில்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home