வண்ண ஆடைகள் அணியும் தன்மை
வெண்பட்டு :
அதிசுரமும் , குளிரும் வாத நோயும் போகும். பெண் வசியமும், ஒளியும் வனப்பும் உண்டாகும்.
வெள்ளை :
வாத தோஷ்ங்களும், வியர்வையும் விலகும். ஆயுள் விருத்தி, லட்சமிகடாஷ்சம், வனப்பு , மகிழ்ச்சி , அறிவு பலம் இவையுண்டாகும்.
சிவப்பு :
அதிபத்தியம் , உட்சூடு , தருணகரம் , வமனம் , அரோசகம் , சிலேஷ்ம கோபம் , காசம் இவைகளில் ஏதேனும் ஒரு ரோகம் இருப்பின் சிவப்பு வஸ்திரம் உடுத்த ரோகம் விருத்தியடையும்.
மஞ்சள் :
வாதநீர் சுளுக்கு , இருமல் , மாறாத்தினவு , தினிச்சுமை , மலபந்தம் , நீங்கும்.
பச்சை :
உட்சூடு சிலேஷ்ம தோஷம் போகும். கண்ணுக்குக் குளிர்ச்சி தேக பூரிப்பு உண்டாகும்.
கருப்பு :
இருமல் சுரம் , மகாசர்ப்பருஞ்ச , அக்கினிமந்தம் , பயித்தியம் தீரும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home