Tuesday, 19 January 2016

மூச்சுப் சுவாசம் மாற்றி நடந்தால்: இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்

ஏதேனும் ஒரு நாசியில் தான் சுவாசம் ஓடும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது.

            நமது ஆள்காட்டி விரல்களை படத்தில் காட்டியபடி நம் நாசிக்கு நடுவில் உள்ள தண்டு அதாவது நடுவீதியாக இருக்கும் தண்டில் விரல்களை வைத்து சுவாசத்தை மெதுவாக வெளிவிட்டால் விரல்களில் காற்று மெதுவாக படும். அப்பொழுது சுவாசம் எந்த கலையில் ஒடுகிறது என்பது உங்கருக்கே தெளிவாக தெரியும்.
   
            இதுவே சுவாசம் எந்த கலையில் ஓடுகிறது என்பதை அறிந்து கொள்ளும் முறை.

 சுவாசம் மாற்றி நடந்தால் 

              சூரிய கலை ஓட வேண்டிய நேரத்தில் சந்திர கலையும், சந்திர கலை ஓட வேண்டிய நேரத்தில் சூரிய கலையும் ஓடினால் அதன் விளைவுகள்

ஞாயிறு அன்று சந்திரகலை ஓடினால்      – இருமல் உண்டாகும்.

திங்கள் அன்று சூரியகலை ஓடினால்      – ஜலதோஷமும் , உறவினர்களுக்கு கேடும் உண்டாகும்.

செவ்வாய் அன்று சிந்திரகலை ஓடினால்      – காய்ச்சல், வீண் பிரச்சனைகள் உடற்சோர்வு உண்டாகும்.

புதன்கிழமை அன்று சூரியகலை ஓடினால்     – தலைகுத்தல் உண்டாகும்.

வியாழன் அன்று சுவாசம் மாறி ஓடினால்        –  உடல்வலி உண்டாகும்

வெள்ளிக் கிழமை அன்று சூரியகலை ஓடினால்   – கண், காது நோயும், வெளியூர் செல்ல தடையும் உண்டாகும்.

சனிக்கிழமை அன்று சந்திரகலை ஓடினால்          –  பேதி உண்டாகும்.

சூரிய கலை ஓட வேண்டிய நேரத்தில் சந்திர கலையும் , சந்திர கலை ஓட வேண்டிய நேரத்தில் சூரிய கலையும் ஓடினால் அதன் விளைவுகள்.

             சூரியகலை ஓடும் பொழுது நோய்க்கான மருந்து சாப்பிட்டால்  அம்மருந்து உடன் வேலை செய்து , நோய் விரைவில் குணமாகும் . சந்திர கலை ஓடும் பொழுது மருந்து சாப்பிட்டால் நோய் விரைவில் தீராது. ஆனால் சந்திரகலை ஓடும் பொழுது , புது வீட்டிற்கு குடிபுகுதல் , கிணறு வெட்டுதல் , புது ஆடைகள் அணிதல் இவை போன்ற செயல்களை செய்யலாம் .

           சூரியகலையில் சுவாசம் ஓடும் பொழுது எந்த ஒரு செயலையும் செய்தால் வெற்றி உண்டாகும். ஆகவேதான் சித்தர்களும் , முனிவர்களும் , ரிஷிகளும் , வாசிக் கோலையும் , கமண்டலத்தையும் , இL து கையில் வைத்தே எப்பொழுதும் காட்சி தருவர். வாசிக்கோலை அவர்கள் எங்கு சென்றாலும் இடது கை அக்குளுக்குள் வைத்துதான் செல்வர். அப்போதுதான் சுவாசம் சூரியகலையில் ஓடும்.

             ஆகவே நாம் எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் பொழுது இடது அக்குளுக்குள்  ஏதேனும் ஒரு பொருளை வைத்துக் கொண்டால் காரியம் சித்தியாகும். இடது கையை ஊன்றி உட்கார்ந்தால் சுவாசம் வலது நாசியல் ஒடும். வலது கையை ஊன்றி உட்கார்ந்தால் சுவாசம் இடது நாசியில் ஓடும். சுவாசம் வலது நாசியல் ஓடிக்கொண்டிருப்பது போல படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவ ஆலயங்களில்  உள்ள நந்தி பகவான் கூட இடது காலை மடக்கி அடியில் வைத்து படுத்திருப்பார். இதனால் சுவசம் வலது நாசியில் ஓடும். அப்போது நந்தி பகவானுக்கு வலதுபுறமாக நின்று சாமி தரிசனம் செய்யும் பொழுது நம்முடைய நோய்களும் விலகும். நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.

           உதாரணமாக சூரிய கலை ஓடக்கூடிய நாட்களில் ஒருநாளை எடுத்துக் கொள்வோம். அதாவது சனிக்கிழமை அதிகாலை 3.55 மணிக்கு சந்திர கலையில் ஓடும். சரியாக 4 மணிக்கு சூரிய கலைக்கு மாற வேண்டும். அதற்கு இடது கையை தலைக்கு வைத்துத் தூங்குவோம் இதனால் சூரிய கலைக்கு சுவாசம் மாற வேண்டும்.

          ஆனால் சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு நிச்சயமாக என்னதான் செய்தாலும் சூரிய கலைக்கு மாறாது. நாம் இடது நாசியை விரல் வைத்து அடைத்தாலும் மூச்சுத் திணறல் ஏற்படும்.

             ஒருவனுக்கு அவ்வாறு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவாசம் சூரிய கலையில் ஓடினால் அவன் ஒரு பெரிய மகான். நீங்களே அவ்வாறு சரத்தை மாற்றிப் பார்த்தாலும் சுவாசம் மாறாது. இதனை ஒராண்டும் அல்ல, ஒரு மாதமும் அல்ல , ஒரு நாளில் உணர்வீர்கள். சூரிய கலையில் சுவாசம் ஓடும் , அதே போல , கந்திர கலை சுவாசம் ஓடும் பொழுது இடது கையை தலைக்கு வைத்து படுத்தால் சூரியலையில் சுவாசம் ஓடும். சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவாசம் சூரிய கலைக்கு மாறாது. ஏன் என்றால் அதிகாலை 4 மணி பிரம்ம முகூர்த்தம். அப்பொழுது நாம் என்ன தான் செய்தாலும் அவாசம் மாறாது. அதே போல் சந்திரகலை ஓடக்கூடிய நாளிலும் , சுவாசம் இதே போல் தான் இருக்கும். இன்னும் ஒரு உண்மையைச் சொல்கின்றேன்.

            அது என்னவென்றால், முகத்தை இடதுபுறமாக சுழற்றி இழுக்கும் பொழுது சந்திரகலை வழிதான் சுவாசம் வர வேண்டும். ஆனால் சந்திரகலையிலும் , சூரிய கலையிலும் சுவாசம் வரும். ஆனால் முகத்தை வலது புறமாக சுழற்றி இழுக்கும் பொழுது கந்திர கலையில் ஒரு துளிகூட சுவாசம் ஓடாது. சூரிய கலையில் மட்டும் தான் செல்லும். ஏன் என்றால் சந்திர கலை என்பது பெண். பெண் என்பது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவள். சூரியகலை என்பது ஆண். ஆண் என்பவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர். வலது  நாசியில்  உள்ள துவாரம் பெரியது. இடது நாசியில் உள்ள துவாரம்  சிறியது. ஆகையால் இடது பக்கமாக முகத்தை கழற்றி இழுக்கும் பொழுது , சந்திர கலையிலும் , சூரிய கலையலும் ஓடும். இதைக் தான் கோரக்கர் சித்தர் தினகரனில் பயிற்சி பெற்ற பின்பு என்று கூறியுள்ளார். இம் முறையை மூன்று ஆண்டுகள் கை வைக்காமல் செய்து வந்தால் சித்தியாகும் . கை வைத்து எத்தனை ஆண்டுகள் மூச்சுப் பயிற்சி செய்தாலும் சித்தி ஆகாது.

ஒரு மனிதனுக்கு சராசரியாக 12 அங்குலம் காற்றுதான் உள்ளே செல்லும். அதில் 8 அங்குலம் உள்ளேயே தங்கிக் கொள்ளும் , 4 அங்குலம் மட்டுமேதான் வெளியே வரும்.

12 எண்ணும் வரையில் சூரிய கலையில் இழுக்க வேண்டும்

10 எண்ணும் வரையில் உள்ளே நிறுத்த ( கும்பகம் செய்ய ) வேண்டும்

4 எண்ணும் வரையில் சுவாசத்தை சந்திர கலையில் வெளிவிட வேண்டும்.

           இம்முறையினை மூன்றுமாத காலம் செய்ய வேண்டும். பின்னர் 24 எண்ணும் வரையில் காற்றை உள்ளே இழுத்து , 20 எண்ணும் வரையில் கும்பகம் செய்து 8 எண்ணும் வரை கந்திர கலையில் காற்றை வெளிவிட வேண்டும். இவ்வாறு நாட்கள் செல்ல செல்ல கும்பகம் செய்வதை அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அதை போல் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது எப்படி வேண்டுமானாலும் இழுத்துக் கொள்ளலாம். ஆனால் வெளியே விடும் பொழுது மெதுவாக விடவேண்டும்.

              இவ்வாறு மூச்சை மெதுவாக விடும் பொழுது ஆயுளும் அதிகரிக்கும். இவ்வாறு செய்யும் பொழுது முதலில் மூச்சுத்திணறல்  ஏற்படும். அப்பொழுது பயப்படாமல் இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வரவேண்டும் இம்முறையை செய்து வந்தால் 10 நாட்களில் உங்களுக்கு மாற்றம் தெரியும். பத்து நாட்களில் உங்கள் நெற்றியில் வண்டு ஊருவது போல நமநம வென்றிருக்கும். இம்முறையினை அதிகாலையிலும் , மாலை  நேரத்திலும் செய்வது மிகவும் நன்று.

             

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை  சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home