பச்சரிசி , புழுங்கலரிசி , சுத்த அன்னம் : இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்
பச்சரிசி அன்னம் :
பச்சரிசி அன்னமானது உடலில் பலத்தை உண்டாக்கும். பித்த கோபகிரிச்சனத்தை நீக்கும். குழந்தைகளுக்கு மட்டும் மந்தம் உண்டாகும்.
புழுங்கலரிசி அன்னம் :
புழுங்கலரிசிச் சாதம் புசிப்பவர்களுக்கு வாத, கோபம் முதலிய பற்பலவலிய ரோகங்கள் யாதொன்றும் இல்லை. நோயாளிக்கும் கொடுக்கலாம்.
சுத்த அன்னம் :
சுத்த அன்னம் என்பது பழைய அரிசியை நொய் தவிடு முதலியவை போகும்படி நன்றாய் தீட்டி இளம் வென்னீரில் மூன்று முறை கழுவி, துணியில் கொட்டி சற்றே ஆற வைத்து ஒரு பாத்திரத்தில் அரிசிக்கு மூன்று பங்கு நீர் விட்டு அடுப்பேற்றி நீர் கொதிக்குமட்டில் காய்ச்சி அரிசியைப் போட்டு முக்கால் பதமாக வெந்தவுடன் கரண்டியால் விளாவி வடித்துக் கொண்டு மறுபடியும் சிறு தீயில் வைத்து பக்குவமான பதத்தில் இறக்கிக் கொள்ளுவதே. அவ்வன்னத்துடன் நான்கு கறி வகைகளைச் சேர்த்து புசித்துவரில் வாத பித்த சிலேத்துமம் என்னும் மூவித ரோகங்ககளையும் விலக்கும். மூவித தேக கட்டும் உத்தமம். குடலைப் பற்றிய ரோகங்கள் மற்றும் மூலத்தையும் நீக்கும்.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home