Sunday, 24 January 2016

உணவு வகையில் கஞ்சியின் மருத்துவ குணங்கள் : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

1வது விதி :

               பசும்பால் , பச்சரிசி சேர்த்துக் காய்ச்சிய கஞ்சியை சாப்பிடுவோர்களுக்கு பித்த எரிவு நீங்கும். சுக்கிலம் விருத்தியாகும். தாது புஷ்டிக்கும் , தேகம் பூரிக்கும். புத்தி அதிகரிக்கும்.

2வது விதி :

             கோதுமைக் கஞ்சியானது வாதசாரம் , ஜலதோஷம் , கபம் , ஜன்னி பாதம் இவைகளை விலக்கும். தேகத்திற்கு வன்மை தரும்.

3வது விதி : 

              கொள்ளு ( காணப்பயிறு) அரிசியில் , காய்ச்சிய கஞ்சியானது அதிக பசிதிபனம் உண்டாகும். எள்ளை கையினால் கசக்கிப் பழியும் பலமும் அதற்கு தக்க வீரியத்தை கிழவர்களுக்கும்  உண்டாக்கும்.

4 வது விதி :

                 வடிகஞ்சி என்பது , சாதத்தில் இருந்து வடிக்கப்பட்ட கஞ்சியாகும். வாதசம்மந்தப்பட்ட நோய்கள் கேட்கும். மேலும் விழிகளுக்கு குளிர்ச்சியைத் தரும்.
பித்த கோபம் நீங்கும். உடற்பூரிக்கும் , சாதம் வேகும் போது மீதி வடிக்கின்ற வடிதண்ணீர் கருங்கைப் போக்கும்.

5 வது விதி :

                 பஞ்சவகை கஞ்சி என்பது துவரை, உளுந்து , கடலை , சிறு பயறு , பச்சரிசி , இவைகள்  ஐந்தும் வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து தனித்தனியே துணியில் முடிந்து ஒரு பாத்திரத்தில் இரண்டு படி ஆத்து தண்ணீர் விட்டு அதில் மேற்படி முடிச்சுகளைப் போட்டு அதில் ஒரு பங்காய் காய்ச்சி இறக்கி நீடித்த லங்கணக்காரர்கள் லங்கண்முடிவில் இரண்டு மூன்று வேலை அருந்தினால் திரிதோஷ விகாரங்களும் அணுகாது. காசம் இளைப்பு ஆகியவை நீக்கும்.

                
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home