குழந்தை பாக்கியம் எளிய முறையில் மருத்துவம் சோதிக்கப்பட்ட உண்மை:இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்
* மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிறு வலியால் துடித்தால் சிறியாநங்கை பொடி, எட்டி மரப்பட்டையும் தலைக்கு குளித்த நாள் முதல் எழு நாட்களுக்கு காலை மட்டும் ஒரு வேளை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் உண்டாகும்.
* தலைக்கு குளிக்கும் இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளைபட்டு குறுக்கு வலி இருந்தால் நெருஞ்சி செடியை சமூலம் (வேர் முதல் அனைத்தும்) பறித்து இடித்து எட்டு தம்ளர் நீர் விட்டு அதை ஒரு தம்ளர் அளவுக்கு சுண்டக்காய்ச்சி இரவு ஒரு வேளை மட்டும் ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுவது நிற்கும். இவ்வாறு செய்து நிற்கவில்லை என்றால் வீலி இலையுடன் சின்ன வெங்காயத்தை அரைத்து மோருடன் சாப்பிட குணம் தெரியும்.
* தலைக்கு குளிக்கும் நான்கு நாட்களுக்கு முன் வயிறு உப்பினால் பெருங்காயத்தை நல்ல எண்ணையில் வறுத்து நன்கு இடித்து சலித்து வைத்துக்கொண்டு பெண் தலைக்கு குளித்த நாள் முதல் ஒரு சிட்டிகை அளவு எடுத்து, பெண்ணின் இனிக்குறியின் உள்ளே தடவி தகைக்கு குளித்த அன்று முதல் மூன்று நாட்கள் உடலுறவு கொண்டால் வயிறு உப்பல் குறைந்து அடுத்த ஒரு மாத காலத்தில் குழந்தை பாக்கியமுண்டாகும்.
* மாதவிடாய் காலத்திற்கு எட்டு நாட்களுக்கு முன்பு இரண்டு மார்புகளும் வலித்தால் திப்பிலி, சூடம் இரண்டையும் திரியடி பிரதானம் எடுத்து இரண்டையும் தனிக்தனியே அரைத்து பின் ஒன்று சேர்த்து பெண்ணின் இனக்குறியில் சுண்டக்காய் அளவு உள்ளே செலுத்தி தலைக்கு குளித்த அன்று முதல் மூன்று நாட்கள் சரீரசம்மந்தப் பட்டால் மூன்று அல்லது நான்கு மாதத்தில் வாரிசு உண்டாகும்.
பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக மற்றும் அனைத்து நோய்களும் குணமாக.
மஞ்சள் நிறத்தில் இருக்கும் அரிதாரம் சுண்டைக்காய் அளவு நல்லெண்ணையில் பொறித்த பெருங்காயம் ஒன்றரை சுண்டைக்காய் அளவு , இந்து உப்பு இரண்டு நெல்லிக்காய் அளவு. இம் மூன்றையும் அரைத்து இரண்டு மிளகளவு எடுத்து இரண்டு சொட்டு சுடுநீரில் குழைத்து ஆணின் உறுப்பில் தடவி, மூன்று மிளகு அளவு எடுத்து மூன்று சொட்டு சுடுநீரில் குழைத்து பெண்ணின் இனக்குறியின் உள்ளே தடவி தலைக்கு குளித்த அன்று முதல் மூன்று நாட்கள் சரீர சம்மந்தப்பட்டால் சகல நோய்களும் குணமாகும். மேலும் கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட நோய்களும் குணமாகும். உடலுறவுக்கு பிறகு சிறிது மார்பு வலியும், குறுக்கு வலியும் உண்டாகும். அதிக கட்டிகளும், இரத்தமும் விசாலமாக வெளியேறும். இதனால் பாதிப்பு இல்லை. வெள்ளைப்படுதல் அதிகமாகும். இதனால் நன்மையே.
* பெண்களின் கர்ப்பப்பைக்குள் ஏன் கிருமிகள் அதிகம் இருக்கிறது என்றால் பெண்கள் தலைக்கு குளிக்கும் பொழுது இனிப்பு அதிகம் சாப்பிட்டால் இரத்தப் போக்கு அதிகமாகும். அவ்வாறு அதிகமானால் மலவாய் வழியாக கிருமிகள் மூத்திர துவாரத்தின் வழியே உள்ளேபோகும். உடம்பும் அசதியாக இருக்கும். ஆதலால் தலைக்கு குளிக்கும் பொழுது யாரும் இனிப்பு சாப்பிடக்கூடாது. இதில் உள்ள அனைத்துயும் பெண்களின் நலனுக்காக . இனியாவது தலைக்கு குளிக்கும் பொழுது இனிப்பு சாப்பிடமாட்டீர்கள் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
* பெண்களுக்கு வெள்ளைப்பட்டு அதில் வாடை அதிகமாக வந்தால் கர்ப்பப்பையை சுற்றி புண் அதிகமாக இருக்கும் என அறிக.
வெள்ளையாக தயர்போல் கட்டியாக வரும். அதில் வாடை வந்தால் மார்பில் மற்றும் கர்ப்பப் பையில் புற்று நோய் வரும் என அறிக.
பெண்களுக்கு வெள்ளை அதிகமாக பட்டால் வாழைப்பூவில் உள்ள வெள்ளையாக இருக்கும் மோட்டை நன்றாக இடித்து அதனுடன் பாலை ஊற்ற வெள்ளையாக இருக்கும் மொட்டை நன்றாக இடித்து அதனுடன் பாலை ஊற்றி மீண்டும் இடிக்கவும், இடித்து அந்த பாலை காலை, மாலை சாப்பிட வெள்ளைப்படுதல் நிற்கும்.(அல்லது) தென்னை மரத்தில் இருக்கும் தென்னம்பாலை அதாவது பூப்பதற்கு முன் மொட்டாக உள்ள பிஞ்சை நன்கு உரலில் போட்டு அதனுடன் பால் உற்றி மறுபடியும் இடித்து அந்த பாலை காலை, மாலை சாப்பிட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நிற்கும்.
அனைத்து மருத்துவ பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

1 Comments:
திரியடி பிரமாணம் என்றால் என்ன அளவு?
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home