சிலர் மாமிசம் சாப்பிடக்கூடாது என்கிறார்கள், சிலர் சாப்பிடலாம் என்கிறார்கள் : இந்த பதிவை பகிருங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாகயிருக்கும்
இறைச்சி வகை
சிலர் மாமிசம் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். சிலர் சாப்பிடலாம் என்கிறார்கள்.
இறைவன் படைக்கப்பட்ட 84 லட்சம் ஜீவராசிகளும் மனித இனத்துக்காக படைக்கப்பட்டதுதான். எடுத்துக்காட்டாக பூனையிலிருந்து புனுகு எடுக்கப்படுகிறது. மாட்டிலிருந்து கோரோசனை எடுக்கப்படுகிறது. கோழி எச்சம், புறா எச்சம் பல நோய்களுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். இதைப்பற்றி பின்னே குறிப்பிட்டுஉள்ளது. முற்காலத்தில் பக்கவாதம் வந்தால் பச்சைப்புறா கறி சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று சாப்பிட்டார்கள். அதேபோல் ஒவ்வொறு உயிரினங்களும் ஒவ்வொரு நோய்க்கு பயன்படும் என்பதை சித்தர்கள் எழுதி வைத்துள்ளார்கள். இதனை பின்னால் வரும் சந்ததிகள் எல்லா கறியும் சாப்பிட்டால் எந்த நோயும் வராதே என்று எண்ணி சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். சித்தர்களும், ஞானிகளும் மாமிசத்தை சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு விதமான மாமிசத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு என்று தான் கூறியிருக்கிறார்கள். உதாரணமாக ,
வெள்ளாட்டு இறைச்சியின் குணம்
வெள்ளாட்டு இறைச்சியை உண்பவர்க்கு உட்சுரங்களும், வாத பயித்தியமும் , க்ஷயமும் போகும். சரீர புஷ்டியும் வீரியமும் உண்டாகும்.
மான் இறைச்சியின் குணம்
மான் இறைச்சியை தொந்த நோய், ஈளை மாமிச பகந்தரம், கழல்வாயு, வாதப்படை இவை போகும். கண் புகைச்சலும் பித்தமும் போகும்.
ஊர்ப்பன்றி
ஊர்பன்றி இறைச்சியை உண்பவர்க்கு வாத பித்த தொந்தம் விரணம், சுக்கிலம், சிலேஷ்மகோபம், விலுவிலப்பு முதலிய பலவித ரோகங்கள், மருனாதுக்கம் , ஒளஷதக்கெடுதி ஆகிய இவைகள் உண்டாகும்.
முள்ளம் பன்றி இறைச்சியின் குணம்
காட்டுப் பன்றி , முட்பன்றி, இவ் இறைச்சிகள் குணத்தில் நன்றாயிருந்தாலும், முட்பன்றி வன்மை மிகுத்தலால் எந்தப் பன்றியும் இதற்கு நிகரல்ல.
முயல் இறைச்சியின் குணம்
முயல் கறியால் விரைவாகிய நடைகள் உண்டாகும். பயத்தியம். சளி, இருமல், மகாசுவாசம், வாய்வு மலச்சிக்கல் நீங்கும்.
உடும்பு இறைச்சியின் குணம்
இயல்பாகத் துவர்ப்பும், இனிப்பும் உள்ள உடும்பு இறைச்சியினால் துர்ப்பலம், வீக்கம், சொறி, கிரகணதோஷம், சிரசு, காதுகளில் நோய், உடல்சூடு, குஷ்டம், விரணம், க்ஷயம், பிரமேகம், வெள்ளை, மூலம், குடல்வாதம், வாத பித்தம், பேதி, இவைகள் விலகும்.
புலி இறைச்சியின் குணம்
புலி இறைச்சியினால் உன்மாத ரோகம் போகும்.
மாட்டு இறைச்சியின் குணம்
மாட்டு இறைச்சி உண்டால் சகல நோய்களும் உண்டாகும்.
எலி இறைச்சியின் குணம்
எலி இறைச்சி குன்மம், பிலிகம் , மார்பு வலி, பிளவை, தினவு இவைகளை நீக்கும், பூரிப்பு வீரிய விருத்தியைத் தரும்.
கோழி இறைச்சியின் குணம்
சூடுள்ள கோழிக் கறியை உண்டால் ஒளஷத வேகம், மகாவாதம் , சுவாசம், தேகப் கடுப்பு , மந்தாக்கினி மூலம் , இவைகள் போகும் , சுக்கிலம் , கொழுப்புள்ள விரணம், பித்தம் இவைகளுண்டாகும். உடம்பு இளைக்கும்.
வெண்புறா இறைச்சியின் குணம்
பத்தியத்திற்கான வெண்புறாக் கறி வாத பயித்தியம் ஜலமோகம் , விரணவெண்குஷ்டம், கரப்பான் , சொறி இவைகளை நீக்கும்.
விரால் மீன் இறைச்சியின் குணம்
குளத்து விரால் பிணியை நீக்கி உடல் வளர்த்து , குடலுக்கு சுகம் தரும்.
கருவாட்டு இறைச்சியின் குணம்
பத்தியக் கறியாகிய சுறாக்கருவாட்டை உண்பவருக்கு குத்தல் , கிரகணி, வயிற்று நோய், வாதாதிசாரம் , இவைகள் நீங்கும்.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை. அதனை சோதிக்கபட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மொழிகளில் இதை போன்ற பதிவுகள் விரைவில்...
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home