ஏன் 108 முறை 1008 முறை மந்திரம் உச்சரிக்கிறோம் : அனைவருக்கும் பயனுள்ளவாறு பகிர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்
மூலிகைகளுக்கு உயிர் உண்டு என்பது அனைவரும் அறிந்தது. அதே போல் அனைத்து மந்திரத்திற்கும் உயிர் உண்டு என்று ரிஷிகளும் , ஞானிகளும் கூறுகின்றார்களே அது உண்மைய?
அது நீயானால் அதுவே சொல்லும்
உண்மைதான் " அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் " என்று கூறுவார்கள். அதே போல் ஒரு எழுத்தை பலமுறை உச்சரித்தால் அதற்கு உயிர் உண்டாகிவிடும். இப்பொழுது உள்ள நடைமுறையில் கூட குழந்தைகளுக்கு சீர் அடித்து இருந்தால் சிலபேர் வேப்ப இலையில் மந்திரித்து மந்திரத்தை சொல்லச் சொல்ல குழந்தைக்கு நோய் நிவர்த்தியாகிவிடும். ஒவ்வொரு மந்திரத்தையும் ஏன் 108 முறை 1008 முறை உச்சரித்து உரு ஏற்ற வேண்டும் என்ற முறை எப்படி வந்தது என்றால், 27 நட்சத்திரங்களுக்கும், ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் வீதம் (4x27) 108 மந்திரங்கள். அதே போல் நமது உடலில் சகஸ்காரத்தில் 1008 இதழ் கொண்ட தாமரை உள்ளது. இதில் அனைத்து சக்திகளும் உள்ளது. ஆகையால் தான் 1008 முறை மந்திரம் ஜெபிக்கின்றோம். மேலும் எந்த ஒரு மந்திரத்தையும் வெளிப்படையாக சொன்னால் நூற்றுக்கு 5 % தான் பலிக்கும். மனதிற்குள்ளேயே கூறினால் 50% தான் பலிக்கும். ஆனால் வாசியை நிறுத்தி கும்பகம் செய்து சொன்னால் நூற்றுக்கு நூறு தசவிகிதம் பலிக்கும். அறு சுவையை அருந்தக்கூடிய மனிதர்கள் மந்திரம் ஜெபித்தால் பலிக்காது. அவர்கள் ரேசகம் , கும்பகம் , பூரகம் செய்து கும்பகத்தில் இருந்து கொண்டு மந்திரம் ஜெபித்தால் அம் மந்திரத்திற்கு உயிர் உண்டாகிவிடும். இதுதான் உண்மை ரகசியம்.
மேலும் ஒரு மந்திரத்தை ஐந்து லட்சம் உரு ஏற்றுவதை குறைக்க வழி அமாவாசை அன்று 1008 முறை மந்திரம் ஜெபித்தால் 50,000 வரை உரு ஏற்றியதற்கு சமம். அமாவாசை அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் 1008 முறை மந்திரம் ஜெபித்தால் 60,000 வரை உரு ஏற்றியதற்கு சமம். அதே போல் சூரிய கிரகணத்தன்று 1008 முறை மந்திரம் ஜெபித்தால் இரண்டு லட்சம் முறை உரு ஏற்றியதற்கு சமம். அன்று ஞாயிற்றுக் கிழமையும் பூச நட்சத்திரமும் இருந்தால் 2 1/2 லட்சம் முறை மந்திரம் ஜெபித்ததற்குச் சமம். அன்று உரு ஜெபிப்பவர் நட்சத்திரமாக இருந்தால் 2,60,000 முறை உரு ஜெபித்ததற்கு சமம். சூரிய கிரகணம் அன்று உத்ராயினமாகவும். ஞாயிற்றுக் கிழமையும், மந்திரம் ஜெபிப்பவரின் நட்சத்திரமாகவும் இருந்தால் 108 முறை மந்திரம் ஜெபித்தால் 5,00,000 முறை மந்திரம் ஜெபித்ததற்கு சமம். மந்திரம் கால் மதி முக்கால்
இந்த தகவல் அனைத்து ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
உங்கள் கருத்துக்களை வரவேற்க்கபடுகிறது .
In mobile or any handset Click in blog View my complete profile. then view all post.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home