48 நாட்கள் என்பதின் முலுமையான விளக்கம் : மற்றவர்களுக்கு பயனுள்ளவாறு பகி்ர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்
48 நாள் பரிகாரம் என்று சொல்கிறார்களே, ஏன்? 48 நாள் என்று குறிப்பிட்டுக் கூறுகிறார்களே, 45 நாள் அல்லது 50 நாள் என்று குறிப்பிடலாமே. 48 நாள் குறிப்பிட்டுவதின் காரணம் என்ன என்று பார்ப்போம்.
முற்காலங்களில் ஆணும், பெண்ணும் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றால் நல்ல நாள், நட்சத்திரம், கிரக நிலைகள், நல்ல நேரம், பார்த்து வந்தனர். அப்படியெல்லாம் பார்த்து உடலுறவில் ஈடுட்டு வந்ததால் தான் நல்ல ஆரோக்கியமான, நல்ல கிரக நிலையில் குழந்தைகளைப் பெற்று வந்தனர். ஆனால் இன்றோ அப்படி அல்ல. நல்ல நேரம் எதுவும் பார்க்காமலேயே உடலுறவு கொள்கின்றனர்.
இதனால் நல்ல கிரக நிலையில் குழந்தைகள் பிறப்பதில்லை. ஒருவருடைய ஜாதகத்தை துல்லியமாக கணிக்க இயலாது. எனவே அக் குழந்தைக்குரிய தெய்வம் மற்றும் சரியான பரிகாரம் எதுவென்று முழுமையாக தெரியாமல் போய்விடும். எனவே அக்குழந்தை வளர வளர இடர்கள் வரும். இதனைத் தடுக்க பரிகாரம் செய்யலாம் . ஆனால் அந்த நாளில் , எந்த திதியில், எந்த கிரக நிலையில் பரிகாரம் செய்ய வேண்டும் எனத் தெரியாது.
எனவே 48 நாட்கள் தொடர்ந்து பரிகாரம் செய்வதின் மூலம் ஒரு குழந்தை பிறந்த திதி, நட்சத்திரம், கிரக நிலை, ஆகியன 48 நாட்களுக்குள் வந்து விடும். அக் குழந்தைக்குரிய தெய்வத்திற்கு பரிகாரம் செய்து விடலாம். 48 நாட்கள் என்று குறிப்பிட்டதற்கு காரணம் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் , நவகிரகங்கள் 9 ஆகியன சேர்ந்த கூட்டே 48 என்பதாகும். எனவே 48 நாட்கள் தொடர்ந்து பரிகாரம் செய்வதால் பரிகாரம் நிவர்த்தி ஆகும்.
Click in blog View my complete profile. then view all post.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home