முத்திரைகள் நம் இளமை காக்கும் எளிய பயிற்சி! பயிலப் பயில பரவும் புத்துணர்வு ; விலகும் வியாதிகள்!
' அகம் பிரம்மாஸ்மி' - நமக்குள்தான் இறைவன் இருக்கிறான் என்ற பொருளை மட்டுமல்ல; நமக்கு எற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து நல்லது, கெட்டதுகளைச் சீர்செய்து சமனாக்கும் சக்தியும் நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் சேர்த்துத்தான் சொல்கிறது!
நமக்குள் இருக்கிற பிணிகளை, உடலுறுப்பு இயக்கக் குறைகளை மருந்து போன்ற புறப்பொருட்கள் இல்லாமல் நமது நரம்பு மண்டலங்களைத் தூண்டியே சீர்செய்ய முடியும்! அதில் நியூரோதெரபி , யோகம், தியானம், பிரணாயாமம் கலந்த முத்திரைப் பயிற்சி எளிமையானது!
இதை நமது முன்னோர்கள் ரகசியமானதாக வைத்திருக்கிறார்கள் சில காரணங்களால்! பின்னால் வந்தவர்கள் அதை தங்கள் உடமைப் பொருள்போல் கருதி, அந்தக் கலைகளைத் தங்கள் வாழ்க்கை வசதிக்குப் பொருள் தரும் கலைகளாக மாற்றி விட்டார்கள்!
அரிய கலைகளெல்லாம் அனைவருக்கும் உரியது. அதிலும் மனிதர்களை உயர்வுபடுத்தும் - உறுதிபடுத்தும் யோகம் சார்ந்த கலைகள் மக்களின் சமூகச் சொத்து என்று சொல்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்!
' எனக்கு நரகமே கிடைப்பதாயினும் 'ஓம் நமோ நாராயணா ' என்ற மந்திரத்தின் உட்பொருளை உலக மாந்தர் அத்தனை பேருக்கும் சொல்லியே தீருவேன் ' என்று கோபுரம் ஏறி பிரகடனம் செய்த ராமானுஜர்போல், முத்திரை என்ற உயரிய யோகத்தின் அளப்பரிய பலன்களை எளியமுறையில் சொல்லி இருக்கின்கிறோம்.
தலைவலி முதல் புற்றுநோய் வரை எவ்வளவு கடுமையான நோயையும் முறையான முத்திரைப் பயிற்சியால் குணமாக்க முடியும் என்று இப்பதிவில் உறுதிபடக் கூறியுள்ளார் டாக்டர் ஜாண் பி. நாயகம். M.B.B.S.,M.D., Ph.D., D.Sc
என்ன நோய்க்கு என்ன முத்திரைகளைச் செய்ய வேண்டும் என்று படங்களோடு இந்த ' நோய் தீர்க்கும் முத்திரைகள் ' எனும் இப்பதிவில் இனி வரும்.
நவீன விஞ்ஞானத்தால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத பல உண்மைகளையும் ரகசியங்களையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் தங்களது மெய்ஞ்ஞானத்தால் கண்டுபிடித்து விட்டனர். நமது ஐம்புலன்களுக்கும் அப்பால் உள்ள சக்தி உலகின் ரகசியங்களை அவர்கள் அலசி ஆராய்ந்து எழுதி வைத்துள்ளனர்.
முத்திரைகள் நம் இளமை காக்கும் எளிய பயிற்சி! பயிலப் பயில பரவும் புத்துணர்வு ; விலகும் வியாதிகள்!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home