Thursday, 18 February 2016

அடிபட்டவர்களை வர்மத்தில் எப்படி எழுப்புவது : மற்றவர்க்கு பகிருங்கள் உள்ளம் மகிழ

          ஒரு மனிதன் மரத்தின் கீழ்  நின்று வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றான். அப்போது மரத்தின் மேல் உள்ள காய்ந்த விறகானது அவரின் வர்ம முடிச்சின் மேல் பட்டு பாதிப்பு ஏற்பட்டால் அவரை வர்ம முடிச்சை குணப்படுத்தி எழுப்ப முடியுமா? மேலும் வர்மத்தில் அடிபட்டவர்களை எழுப்புவது பற்றி தெளிவாக கூறிப்பிட்டு உள்ளோம்.

குரு முன்நிற்க வேணும்,

ஆதியென்னும் முப்பொருளை மனதில் எண்ணி

அகர்திகனால் வர்மம் கண்டு

ஜோதி யென்னும் முப்பதுக்குள் சுருக்கிப்பாடி

தொல்புவியில் எந்தனுக்கு ஈசன் சொன்னார்

வாதிகளை வர்மம் அதில் அடிகள் பட்டால்

பாரப்பா ! படுவர்மம் பன்னிரெண்டும் சூஸ்திரம்

தன்னை தம்பி தொல்புவியில் ஈசன் சொன்னார்

விதிகளை வர்மம் இதில் அடிகள் பட்டால்

பாரப்பா! படுவர்மம் பன்னிரெண்டும் சூஸ்திரம்

தன்னை நம்பி தொல்புவியில் ஈசன் சொன்னார்

விதிகளை வர்மம் இதில் அடிகள் பட்டால்

பாரப்பா! படுவர்மம் சூஸ்திரம் தன்னை பகர்கின்றேன்

நேரப்பா! நெற்றியில் நெல் இடை தானாகி

ஊரப்பா! உற்றதோர் சேர்த்தகலம்

உண்மையுடன் அடிகள் பட்டால்

பாரப்பா! படுவர்மம் தன்னை பகடுகின்றேன்

தேரப்பா! இதை அறிந்து தெளிவில் நின்று

தெளிவாக கருத்தில் வைத்து மனதில் ஆற்றி

சீரப்பா! வெகுகாலம் முன்பின் பார்த்து

சினம் கோபம் இல்லாத பேர்களுக்கு

ஊரப்பா! உற்றதோர் தீர்த்தகலம்

உண்மையுடன் அடிகள் பட்டால்

ஆரப்பா! அத்தலத்தில் வர்மம் கண்டால்

அணார்ந்து நிமிர்ந்து நிற்கும்

கூறப்பா! நாழிகைதான் மூணே முக்கால்

முழித்திட்டேன் முடிதூக்கி முகம்நாடி

சிரசில் ஓர் அரை அரைந்தால்

எழுந்திருப்பான் என்று சித்தர் செப்பினாரே!

           தென்னாட்டில் உருவாக்கப்பட்ட உன்னதமான கலை வர்மக் கலை. இந்த கலை இப்பொழுது மறைந்து கொண்டே வருகிறது. அதற்குத் காரணம் மக்களுடைய முன்கோபங்களும், பொறாமையும் தான். தன் கூடப் பிறந்தவனாக இருந்தால் கூட அவனை எப்படி கெடுப்பது. எப்படி வர்மத்தில் தட்டுவது என்று எண்ணுகிறார்கள். ஆதலால் தன் பிள்ளையாக இருந்தாலும் இக்கலையைச் சொல்லிக் கொடுக்கக் கூடாது.
சிவயோகிகளுக்கு மட்டும்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால் இக் காலத்தில் அப்படி ஒரு சிவயோகிகள் இல்லை என்பதால் இக் கலை வளராமல் அழிந்து கொண்டே இருக்கிறது. நாங்களும் இங்கு வர்மக்கலை பற்றி கூறவில்லை. வர்மத்தில் அடிபட்டவர்களை எப்படி எழுப்புவது என்றுதான் கூறுகிறோம். அது எவ்வாறு என்றால்

           படுவர்மம் 12, தொடுவர்மம் 96, அடக்கக்காலம்-1 என மொத்தம் 108 வர்மங்கள். இதிலே அண்டவர்மம், பிண்டவர்மம், விந்துவர்மம், தண்டுவர்மம் என்று அதிக வர்மங்கள் 152 உள்ளன. இதில் இருந்து விடுபடுவது எவ்வாறு.

தண்ணீரை முகத்தில் தெளிக்கும்  முறை

          " முன்கட்டு, பின்கட்டு, பிரிவினைகட்டு, பக்ககட்டு, நேர்கட்டு, நெத்திக்கட்டு, உருட்டுக் கட்டு, அலுக்குகட்டு, அடிமரக் கட்டு, அனுமந்திரக்கட்டு, இந்திரபவானே கூடப்பிறந்த சந்திரபவானே நெருப்புக்கு குடம் கொண்டு நீர்க்குப் போக சிவா" என்று, செம்பில் தண்ணீர் வைத்து மந்திரிக்கவும்,

            " சிவா நசிமசி நசிமசி " என்ற மந்திரத்தைச் சொல்லி மூன்றுமுறை தண்ணீர் தெளித்து. முடியை பிடித்து தூக்கி தரையில் உட்கார வைத்து அவன் உச்சிதலையில் ஓங்கி ஒரு அடி அடித்து மும்மூர்த்திகளை நினைத்து உச்சி தலையில் இருக்கும் கைக்கு அடங்கும் முடியை மூன்றுமுறை மேல் நோக்கி இழுக்க வேண்டும். அதற்குப் பின்பு சுக்கை அரிசியில் போட்டு வேகவைத்து கஞ்சியாக கொடுக்க வேண்டும். பின் ஒருவர் சுக்கை நன்கு மென்று மூக்கிலும், காதிலும் ஊத வேண்டும். அதற்குபின் அனைத்து வர்மங்களையும் குணப்படுத்துவது ஆராக்கீரை, இக் கீரையை காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர குணமாகும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home