மூட்டு வலிக்கு சித்த வைத்தியம் ரகசியங்களை வெளிப்படையாக சொல்லி விட்டோம் : பகிர்ந்து மகிழ்வித்து மகிழுங்கள்
இப்போது மக்கள் மிகமிக அவதிப்படுவது, முழங்கால் வலி, சர்க்கரை வியாதி, குறுக்கு வலி முதுகு வலி இதில் அவதிப்படுகிறார்கள். இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா?
முழங்கால் வலிக்கு எவர் ஓருவர் மருந்து கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் தான் முதல் கோடீஸ்வரன். அந்தளவு முழங்கால் வலியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் நான் மக்களுக்கு கொடுத்து நல்லாயிருக்கிறது என்று சொன்ன மருந்தை நான் கீழே குறிப்பிடுகிறேன். ஆகவே இருக்கக்கூடிய எல்லா ரகசியங்களை வெளிப்படையாக சொல்லி விட்டோம். ஆனால் நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால் புண்ணியம் செய்தவர்கள் தான்.
விழிதியிலை எள்ளு புண்ணாக்கு ஆவாரையிலை சமன் கொண்டு கொஞ்சம் வெள்ள வெங்காயம் கலந்து இடித்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டவும். இப்படி மூன்று நாட்கள் பகலில் ஒரு கட்டு இரவில் ஒரு கட்டு கட்டவும்.
கருஊமத்தை இலையை இடித்து முழங்காலில் கட்ட வலி தீரும்.
இதுவும் அது
தைவேளை இலையை கட்ட கேட்கும்.
இதுவும் அது
தழுதாலையுடன் பூண்டு வைத்து அரைத்து முழங்காலில் கட்ட வலி தீரும்.
இதை நெல்லிக்காய் அளவு காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும் (10 ல் 4 பேருக்கு கேட்காது. ஏனென்றால் உடம்பை பொறுத்தது.)
முழங்காலின் உள்ளே மூக்குச்சலி போல் பிசுபிசுதன்மை (மூட்டு ஜவ்வு )இருக்கும். அது இருக்கும் வரை முழங்கால் வலி வராது. ஏனென்றால் வண்டியில் பேரிங்கில் எப்படி க்ரிஸ் இல்லையென்றால் சத்தம் வருகிறதோ, அதேபோல் நம் முழங்கால் அந்த சப்தம் வரும். வந்தால் உள்ளே அந்த பிசுபிசுப்பு தன்மை இல்லை. ஏனென்றால் சிறு வயதில் மது, மாது பழக்கம் இருப்பதாலும் நாம் சாப்பிடக்கூடிய உணவில் யூரியே, அம்மோனியா இருப்பதால் நம் உடம்பில் ஊறக்கூடிய அந்த பிசுப்பிசுப்பு தன்மை ஊறுவதில்லை. இதற்கு ஆங்கில மருந்து சாப்பிட்டாலும் இரண்டு நாள் கேட்கும். மூன்றாவது நாளே வலிக்கும். ஆனால் இதற்கு தீர்வு உண்டு.
நாளை பார்ப்போம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home