வாழ்க்கையில் நீங்கள் அடைய ஆசைப்படுவது எது?'
இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைக் கூறலாம். பணம், பொருள், புகழ், செல்வாக்கு என பல பதில்கள் வரும். ஆனால், ' நோயற்ற வாழ்வு வேண்டும்' என்ற ஆசை உலகிலுள்ள அனைத்து மனிதர்களிடமும் உள்ளது.
மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்தே நோயற்ற வாழ்க்கைக்கான வழிமுறைகளைத் தேடும் முயற்சிகளும் ஆரம்பமாகி விட்டன. ஒவ்வொரு கலாச்சாரத்திலும் பல வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பலவிதமான மருத்துவ முறைகளும் தோன்றி வளர்ந்தன.
இன்று நவீன ஆங்கில மருத்துவம் மிகப் பெரிய வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது. நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. புதிய சாதனைகளும் படைக்கப்படுகின்றன. ஆனால் வந்துவிட்ட நோய்களுக்கு சிகிக்சை அளிப்பதில்தான் ஆங்கில மருத்துவம் முன்னணியில் இருக்கிறது. நோயற்ற வாழ்க்கையை உருவாக்கித் தர இதுவரையில் நவீன மருத்துவத்தால் இயல்வில்லை! ஏன்?
ஆங்கில மருத்துவம் முழக்க முழுக்க விஞ்ஞானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வருகிறது. மனித உடலை அங்குலம் அங்குலமாகக் கூறுபோட்டு, உருப்பெருக்கிகள் கொண்டு ஆராய்ந்து, மனித உடலின் ஒவ்வொரு செல்லும் எவ்வாறு இயங்குகின்றது என்பதை நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்து விட்டது.
ஆனால் ஒவ்வொறு செல்லின் உள்ளேயும் இருந்து அதை இயக்கும் உயிர்சக்தியைக் குறித்து நவீன விஞ்ஞானம் இது வரையில் அறிந்து கொள்ளவில்லை. அந்த உயிர்சக்தியின் தன்மைகள் என்ன? எவ்வாறு உருவாகிறது? எவ்வாறு செயல்படுகிறது என்பன போன்ற பல கேள்விகளுக்கு நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் பதில் இல்லை. செல்களின் உள்ளே இருக்கும் மரபணுக்களைகூட நவீன எலக்ட்ரான் உருப்பெருக்கிகள் மூலம் ஆராய்ந்து முடித்து விட்டார்கள். ஆனால் அவற்றை இயக்கம் உயிர்சக்தியை அளக்கவோ, பகுத்து ஆராயவோ இதுவரையில் எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை!
இங்கேதான் நமது முன்னோர்களின் மெய்ஞ்ஞானத்தின் சிறப்பு புலப்படுகிறது. நவீன விஞ்ஞானத்தால் இதுவரையில் கண்டுபிடிக்க முடியாத பல உண்மைகளையும் ரகசியங்களையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் தங்களது மெய்ஞ்ஞானத்தால் கண்டுபிடித்து விட்டனர். நமது ஐம்புலன்களுக்கும் அப்பால் உள்ள சக்தி உலகின் ரககியங்களை அவர்கள் அலசி ஆராய்ந்து எழுதி வைத்துள்ளனர்.
ஆடுத்த இணைப்பில் மெய்ஞான உண்மைகள் பார்ப்போம், நோய் உருவாகும் காரணங்கள். . .

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home