உடலை காய கல்பமாக்க அல்லது நீண்ட நாள் நோய் இல்லாமல் வாழ
சித்த மருத்துவத்தில் எந்த பக்கத்திலும் சித்தர்கள் காய கல்பம் என்று சொல்லியிருக்கிறார்களே. பல ஆபூர்வமான மூலிகைகளைப் பற்றியும் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். பல சித்த வைத்தியர்களும் கூறுகிறார்கள். அவர்கள் சொல்வதைப் பார்க்கும் பொழுது இவ்வளவு அபூர்வமான மூலிகைகள் இம் மண்ணில் இருக்கின்றதே என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கின்றது. இவ்வளவு அரிய மூலிகைகள் நம் மண்ணில் இருந்தும், ஏன் குறுகிய காலத்திலேயே மனிதர்கள் பிறந்து இருந்து விடுகிறார்கள். அதற்குரிய காரணத்தையும், காய கல்பம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் விரிவாக பார்ப்போம்.
உதாரணமாக ஒரு ஆணுக்கு 40 வகையான வியாதிகள் இருக்கும். பெண்ணுக்கு 20 வகையான வியாதிகள் இருக்கும். இருவரும் இணைந்து பிறக்கும் குழந்தைக்கு 60 வகையான வியாதிகள் இருக்கும். மேலும் அக் குழந்தை வளர்ந்து வரும் பொழுது அறுசுவை உணவை சுவைக்க சுவைக்க அக் குழந்தைக்கு நோய்க்கு இன்னும் தொற்றிக் கொள்ளும்.
அந்தக் குழந்தை வளர வளர சித்தர்களின் அகமா நூல்களைப் படித்து உடலை காய கல்பமாக்க வேண்டும் என்று கூறுவர். அப்படிப்பட்ட காய கல்பம் என்பதைப் பற்றி விரிவாகக் கூறிவுள்ளோம்.
முதலில் உடல் ஆரோக்கியம் பெற பேதிக்கு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் ஆவாரம் செடியின் விறகை வெட்டி நன்கு காய வைத்து அந்த விறகைத்தான் சமையல் செய்ய அனைத்திற்கு எரிபொருளாக பயன்படுத்த வேண்டும். புது மண் பானையில் கருங்குருவை அரிசியை போட்டு, தண்ணீருக்கு பதில் பாலை ஊற்றி சமைக்க வேண்டும். இச் சமயங்களில் அறு சுவைகளையும் நீக்க வேண்டும். இச்சா பத்தியம் இருப்பது மிக முக்கியம். அதன்பின் மிளகை 2353 எண்ணிக்கை எடுத்து அதனை இட்லி கொப்பரையில் போட்டு தண்ணீருக்குப் பதில், பாலை ஊற்றி தட்டை வைத்து அதன்மேல் வெள்ளைத் துணியை விரித்து ஒரு நாழிகை நன்கு மிளகை அவித்து, பின் இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து அதற்குபின் எட்டி மரத்தில் இருக்கும் கசப்பு தேனை எடுத்து புது மண் பானையில் 1 1/2 லிட்டர் தேனை ஊற்றி மிளகை போட்டு மண் பானையின் மீது ஐந்து சீலைமண் செய்து 48 நாட்கள் பூமியில் புதைத்து வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து ஐந்து மிளகும், ஒரு தேக்கரண்டி தேனும் சேர்த்து ஒரு தம்ளர் பாலில் காலையும், மாலையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும் பொழுது ஒரு ஆண்டுக்கு சுவசனம் சந்திர கலையில் ஓட வேண்டும். அப்படி ஓடும் பொழுது வாத நோய்கள் வரும். அக் காலங்களில் அதற்குண்டான மருந்துகளை சாப்பிட வேண்டும். மிளகை முதலில் சாப்பிட ஆரம்பிக்கும் பொழுதே கால்கிலோ இஞ்சி வாங்கி அதன் தோலை மூங்கில் சக்கையால் உரித்து சிறு துண்டுகளாக வெட்டி கசப்புத் தேனில் ஊறவைத்து மிளகை மண்சீலை செய்து பூமிக்குள் புதைத்தது போல இஞ்சியையும் அவ்வாறே செய்ய வேண்டும். மிளகை 48 நாட்கள் சாப்பிட்டு முடித்த உடன், இஞ்சியை 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இஞ்சியை பாக்களவு சாப்பிட்டு வர வேண்டும்.
பின்னர் மீதமுள்ள மிளகை காலியாகும் வரை சாப்பிட்டு வர வேண்டும். ஒர் ஆண்டு சந்திர கலையில் ஓடும் சுவாசத்தை, ஓர் ஆண்டுக்குப் பின் சூரிய கலையில் ஓடவிட வேண்டும். அப் பொழுது உஷ்ண நோய்கள் வரும். அப்பொழுது அதற்குண்டான மருந்துகளை சாப்பிட்டு வர வேண்டும். அதன்பின் சுழிமுனையில் ஒரு ஆண்டு சுவாசத்தை ஓடவிட வேண்டும். சூரிய கலை, சந்திர கலை, சுழிமுனை என்று ஒரு சுவாசம் ஓர் ஆண்டு வீதம் மொத்தம் மூன்று ஆண்டுகள். இவ்வாறு மூன்று ஆண்டுகள் பத்தியம் இருந்து பாலும் சோறும் சாப்பிட்டு வர வேண்டும். அதற்குப்பின் உடலிலுள்ள 3 1/2 கோடி ரோம துவாரங்களும் விழித்துக் கொள்ளும். மனிதனுக்கு உள்ள 72,126 நாடி நரம்புகளும், ரத்த ஓட்டங்களும் சீராக ஓடும். உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணம் ஆகும். பின் 48 நாட்கள் கழித்து பத்தியம் இருந்து காய கல்ப மூலிகைகளை சாப்பிட்டு வர உடல் காய கல்பமாகும்.
இம்முறையினை தொடர்ந்து முறையாகக் கடைப்பிடித்து வந்தால் உடல் காயகல்பமாகும்.
இப் பொழுது சில பண்டிதர்கள், இந்த மூலிகையை சாப்பிட்டால் உடல் காய கல்பமாகும், அந்த மூலிகையைச் சாப்பிட்டால் உடல் காய கல்பமாகும் என்று கூறுகின்றனர். அப்படி ஒரு மூலிகையை சாப்பிட்டு, உடலை காய கல்பமாகும் என்றால் அவரே மூலிகையை சாப்பிட்டு, உடலை அழியாமல் பார்த்துக் கொள்ளலாமே. ஏன் அவ்வாறு செய்யவில்லை. மரணமும் அவர்களுக்கு வராதே. பின் ஏன் அவர்கள் இறந்தார்கள். இதனை எல்லாம் நீங்களே சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். உடலை காயகல்பமாக்க வேண்டும் என்றால் மேலே கூறிய முறையை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் புதினேழு ஆண்டுகள் மெளன விரதம் இருந்து, சுவாசத்தை சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனையில் மாற்றி மாற்றி ஓட விட வேண்டும். பின் உடல் காய கல்பமாகும். இவ்வாறு வாசியினால் உடல் காயகல்பமாகும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home