Friday, 5 February 2016

தேனின் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும் : மற்றவர்களுக்கு பயனுள்ளவாறு பகி்ர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்

மலைத்தேன் :

              சிலேஷ்மகாசம், வாசம், விக்கல், கண்வீரணம், சுரம், தேகக் கடுப்பு இவை நீங்கும். தீபனமும், நல்ல தெளிவும் உண்டாகும்.

கொம்புத்தேன் :

               திரிதோஷங்களையும், உள்மாந்தையும், அரோசகத்தையும் நீக்கும்.

மரப் பொந்து தேன் :

                ஜடராக்கினியும், உஷ்ணமும் உண்டாகும். வமனம், மந்தாக்கினி பலவித விக்கல், ரோகம் , அரோசகம், இருமல், சுவாசம், க்ஷயம், அதிதூல ரோகம்
ஆகியவைகள் குணமாகும்.

புற்றுத் தேன் :

               கபதோஷம், இருமல், ஈளை வாந்தி, நித்திரை ரோகம் இவைகள் நீங்கும்.

புதிய தேன் :

             நிறைந்த ஆயுளும், சரீர வெப்பமும் . தேஜசும் உண்டாகும். அதிகம் சாப்பிட்டால் அருசியும், நெங்சிற்கபமும் விளையும்.

பழைய தேன் :

              வாத ரோகங்கள், வயிற்றெரிச்சல் , வாதமூல ரோகத்தை விளக்கும் மருந்தினது நற்குணங்களைக் கொடுக்கும்.

                          
இந்த தகவல் அனைத்து ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

உங்கள் கருத்துக்களை வரவேற்க்கபடுகிறது .

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home