Thursday, 25 February 2016

சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் –செய்முறை விளக்கம்

       சப்பாத்திக் கள்ளி 3 பழம் எடுத்து, அதில் உள்ளே உள்ள முள்ளையும், வெளியே இருக்கக்கூடிய முள்ளையும் எடுத்துவிட்டு காலையில் 3 பழம், மாலையில் 3 பழம் வெறும் வயிற்றில் சாப்பிட கர்க்கரை வியாதி குறையும்.

இதுவும் அது
 
          முருங்கைச்சாறு ஒரு சங்களவு குடிக்க சர்க்கரை வியாதி கன்ட்ரோலுக்கு வரும்.

இதுவும் அது

           கொடியாக படர்ந்திருக்கும்  நெருஞ்சியை (அதிலும் சிவப்பு கொடியாக இருந்தால் விசேஷமானது) எடுத்து அதை இடித்து சாறு பிழிந்து ஒரு சங்களவு ஊற்றி சாப்பிட கன்ட்ரோலுக்கு வரும்.

          நாவல்பழம் சீசனில் காலையில் 10 பழம், மாலையில் 10 பழம் சாப்பிடவும்.  நல்ல மாற்றங்கள் தெரியும்.

இதுவும் அது

           நாவல்மர பட்டை 25 கிராம், ஆடுதின்னா பாலை 25 கிராம், பாகற்காய் இலை 25 கிராம், சிறியாநங்காய் பொடி 25 கிராம், ஆவாரம் பொடி 25 கிராம் , வில்வ பொடி 25 கிராம், வெல் அருகு பொடி 25 கிராம், சாதா அருகு 25 கிராம் இது தமிழகத்தில் உள்ள அனைத்துமே நாட்டு மருந்து கடையிலே பொடியாக விற்கிறார்கள். இதை அனைத்தையும் ஒன்றாக கலந்து, எம்ப்டி கேப்ஸ்யூல் வாங்கி அதில் 1/2 கேப்ஸ்யூலில் அடைத்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட நல்ல மாற்றங்கள் தெரியும். இந்த பொடியை வாங்கும் போது எப்படி சாப்பிட வேண்டும் என்று கேட்டால்  சொல்லி விடுவார்கள். அதே போல் சர்க்கரை வியாதியின் அளவு 240 இருந்தால் அவர்களுக்கு குழந்தை  பிறப்பது மிக மிக கடினம். அவர்கள் இங்கிலீஷ் மருந்தை சாப்பிட ஒன்று சேரும் போது ஆணுடைய சுக்கிலன் நீச்சத் தண்ணீர் போல் வெளியே வரும். அந்த அணுக்களுக்கு வீரியம் இருக்காது. ஆகையால் அவர்களுக்கு குழந்தை பிறப்பது மிக கடினம். அவர்களுக்கு நாள் ஆக ஆக உடம்பு இறங்கும். ஆகையால் இதையெல்லாம் கண்டுணர்ந்த பின்பு உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளவும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home