Sunday, 7 February 2016

மற்றும் சில பழமொழிகளின் உண்மை ரகசியம் : மற்றவர்களுக்கு பயனுள்ளவாறு பகி்ர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்

ஒருவன் எப்பொழுது கல்விக் கற்றுக்கொள்ள வேண்டும்

படிக்கும் வயதில் படிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

அதற்கு என்ன காரணம். 

" தாய்மார்களின் மார்புக்கு இடைப்பட்ட காலத்தில் "

            அது என்னவென்றால் , சிசுவாக இருக்கும்  போழுது தன் தாயுடைய மார்பைப் பிடித்து பால் குடிக்கின்றோம். அதற்கு பின் தன் மனைவியை தொட செல்வோம்.
அந்த மார்புக்கும், இந்த மார்புக்கும் இடைப்பட்ட வயது 25 , இந்த 25 வயதிற்குள் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும். அவன் பெண் மாயைக்கு சென்று விட்டால் அவனுக்கு படிப்பு வராது. இதுதான் அர்த்தம்.
   
   " ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் "

                ஊரார் பிள்ளை என்பது , தன் மனைவி. அவளை எப்படி உணவு கொடுத்து பார்த்துக் கொள்கின்றோமோ அந்த உணவானது தொப்புள் கொடி வழியாக சென்று வயிற்றில் இருக்கும் தன் பிள்ளைக்கு போய்ச் சேரும். இதுதான் மேற்கூறியதன் அர்த்தம்.

" ஆறிலும் சாவு, நூறிலும் சாவு "

               புராணத்தில் பாண்டவர்கள் படையில் 5 பேர் . கெளரவர்கள் படையில் 100 பேர். இருவருக்கும் இடையே போர் நடக்கும் பொழுது கிருஷ்ணர் பாண்டவர்கள் கூட சேரந்ததால் ஆறு ஆளாக மாறி ஆறுபேர் கூட இருந்தாலும் சாவு, 100 பேர் கொண்ட கெளரவர் படையில் செர்ந்தாலும்  சாவு. அதலால் ஆறிலும் சாவு , நூறிலும் சாவு என்று கூறினர். இதுதான் அதன் அர்த்தம்.

நடைமுறை மாற்றம்

              ஆறு வயதிலும் சாவு, நூறு வயதிலும் சாவு. ஆதலால் எதற்கும் பயப்படக்கூடாது என்று கூறுகின்றோம்.

" தாய் பத்தடி பாய்ந்தால் , பிள்ளை பதினாறு அடி பாயும் "

            தாய் என்பது வாழை மரம். அதை 10 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும். பிள்ளை என்பது தென்னம்பிள்ளை. அதை 16 அடிக்கு ஒன்றுதான் ஊன்ற வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம்.

இந்த தகவல் அனைத்து ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகிறது .

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home