Sunday, 28 February 2016

பாம்பு கடி, நட்டுவக்காலி , பூரான், தேள் போன்ற பல விஷ கடிக்கு மருந்துகள், . ...

பாம்பு கடிக்கு

           வாழைத்தண்டுச் சாற்றை குடிக்கவும்.

நட்டுவக்காலி கடிக்கு

           கொப்பரைத் தேங்காயை மென்று தின்ன வேண்டும்.

பூரான் கடிக்கு

          பனை வெல்லத்தை தின்ன வேண்டும்.

தேள் கடிக்கு

         நாயுருவி வேரை மென்று சாறை விழுங்க வேண்டும்.

நாய்க் கடிக்கு

         நாயுருவி பட்டையை நசுக்கி கடித்த இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும்.

சிலந்தி கடிக்கு

          ஆடாதொடை மூலிகையை அரைத்துக் கட்ட வேண்டும்.

மேகப்படைக்கு

          பேய் ஆவாரைச் செடியை வேரோடு கொண்டு வந்து அரைத்துக் கட்ட வேண்டும்.

கட்டிக்கு

          சப்பாத்திக் கள்ளி பூவை அரைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.

வயிற்றுக் கிருமிக்கு

          வேப்பம் பூவை ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்துக் கொடுக்க வயிற்றுக் கிருமிகள் போகும்.

மலச்சிக்கலுக்கு

         மலச்சிக்கலுக்கு நிலவாகைச் சூரணம் சாப்பிட குணமாகும்.

வயிற்றுக் கடுப்புக்கு

          புளிச்சிக் கீரையை அவித்து சாப்பிட குணமாகும்.

பெருச்சாளி கடிக்கு

           முற்றின தேங்காயை மென்று தின்ன வேண்டும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home