Monday, 8 February 2016

நீர் வகைகளும் அதன் மருத்துவ குணங்களும் : மற்றவர்களுக்கு பயனுள்ளவாறு பகி்ர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்

மாரிசலத்தின் குணம்

           சீதளம் பொருந்திய மாரிநீரால், அனைத்து ஜீவராசிகளுக்கும் குளிர்ச்சி நல்லறிவு, சுக்கிலம், சோனிதம் இவைகள் அதிகரிக்கும்.

ஆலங்கட்டி ஜலம்
           
               சிலேஷ்மப் பிரமேக பெரும்பாடு, நேந்திரத்திற்கு புகைக் கம்மல், கை கால் எரிவு, விக்கல், சுவாசம், மயக்கம், இவைகள் நீங்கும். குளிர்ச்சி    உண்டாகும்.

பனி நீர்

            பனி நீரைச் சூரியோதயக் காலத்தில் அருந்தினால் சொறி, கிரந்தி, குஷ்டம், தாபம், காசம், கிராணி, தனிவாதம், திரிதோஷம், தேகவறட்சி, நீரிழிவு, இவைகள் அடியோடு நீங்கும்.

ஆற்று நீர்

               வாதம், பித்த கோபம் கபதோஷம், தாகம், சரீரரத்திற்கு பித்த சம்பந்தமான சிற்சில ரோகம், இவைகள் போகும். சுக்கில விருத்தி உண்டாகும்.

கங்கை நீர்
          
                  உட்சூடு, மந்தாக்கினி,  க்ஷயம், பித்தகோபம், வாதாதிக்கம், கீழ்ப்பிரமேகம் , தேக எரிச்சல், தாகம் இவைகள் நீங்கும்.

யமுனை நதி நீர்
       
              அதிக சுரம், வெண் குஷ்டரோகம், இருமல், வெட்டை, தாகம், பித்த வாந்தி, சுவாசம், அயர்ச்சி, விந்து நஷ்டம், பெண் பாண்டு ரோகம் இவைகள் ஒழியும்.

கோதாவரி நீர்

              முத்தோஷத் கோபம், பலவிதக் சொறிகள், உள்சிரங்கு , நடுக்கள் சுரம் இவைகள்  நீங்கும்.

துங்கபத்திரா நதி நீர்

            வெப்பம் ,எலுபுருக்கி ரோகம், கரப்பான் , விந்து நஷ்டம் , கண் புகைச்சல் , இருமல், மூத்துக்கிளச்சுரம் , சரீர நிறமாறல் , இவைகள் நீங்கும்.

நருமதா நதி நீர்

            வாந்தி , சுரம், விக்கல் , காமாலை , வயிற்றுப்பிசம், கை , கால் மெலிவு , பித்தகிரி சுரம், கபச்சேர்க்கை, சிலேஷ்மவாத , தொந்தம், இவைகள் நீங்கும்.

சிந்து நதி நீர்

             சரீரக் குடைச்சல் , பத்தி மயக்கம், வெட்டை புண், வியர்வை , தாது நஷ்டம் , அஸதி , தாது கதசுரம், வெள்ளை மூத்திர கிரிச்சுரம், தாகம் , இவைகள் நீங்கும்.

வைகை நதி நீர்
          
            வாதமேகம் , குஷ்டம் , சோபாரோகம், கரப்பான் , தேக எரிச்சல் , தாகம் , பாதஷேவர்தம் , தாது நஷ்டம் , சில விஷம் , இவைகள் நீங்கும்.

சித்திர நதி நீர்

            சரீர நோவு, கரப்பான் , வாந்தி , சூலை , குன்மம், தேகத்தின் சூலை, குன்மம், மூத்திரதோஷம், சங்கவாதிரி தோஷம், வாதகோபம், சரீரவீக்கம் , ஆகியவைகள் போகும்.
காவேரி நதி நீர்

              வயிற்றுப்பாசம், இருமல் , இரைப்பு , வீக்கம், சலதோஷம், ரத்த குன்மம் , நாவறட்சி இவைகள் நீங்கும். அழகு உண்டாகும்.

தாமிர பரணி நதி நீர்

               சகலசுரம், பித்த தோஷம், கண்புகைச்சல் , உட்சுரம் , சுவாசகை, கால்எரிவு, அதிதாகம் இவைகள் நீங்கும்.

பச்சையாற்று நீர்

            நச்சிறுமல், இரைப்பு, ஈளை கபாதிக்கம் , வாதகோபம், ரத்தக் கடுப்பு சுரம் உண்டாகும்.

குளத்து நீர்

           வாதரோகத்தை விருத்தி செய்யும் , மதுப் பிரமேகசலம், சீதளம் இவைகள் உண்டாகும்.

ஏரி நீர் , சுனை நீர்

            ஏரி ஜலம் வாயுவை விருத்தி செய்யும் , வாத பித்த தோஷம் உண்டாகும் , இதை ஒரு நாள் வைத்திருந்து மறு நாள் அருந்த உஷ்ணம் உண்டாகும்.

ஓடை நீர்

             தாகமும், புஜபலமும் உண்டாகும். 

கிணற்று நீர்

            மிகுதாகம் உஷ்ணம், தீபணம், தேக அழற்சி, சூலை , சரீரத்துக் கடுப்பு, இடுப்புக் குடைச்சல், மயக்கம் , வீக்கம், பித்த தோஷம், சுவாசம் , ஆகியவைகள் விலகும்.

சுனை நீர்

            இருமலோடு கூடிய சுரம், வாத கோபம் , கபவாத ரோகம், பயித்திய தோஷம் இவைகள் உண்டாகும்.

ஊற்று நீர்

             மிகுந்த பித்தம், அதிதாகம் இவற்றை உடனே செய்யும்.

பாறை நீர்
   
              தேகங்சில்லிடல், வாததோஷம் , தீராச்சுரம் உண்டாகும்.

அருவி நீர்

              ஜலப்பிரமேகம், ரத்த பித்த ரோகம் விலகும். சிலேஷ்மத்தையும்,
தேகபலத்தையும் உண்டாக்கும்.

                          * * * * * * *

இந்த தகவல் அனைத்து ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகிறது .

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home