Monday, 22 February 2016

மூலிகைகளைப் பறிக்கும் முறை

         சித்தர்கள் கையினால் மூலிகைகளை பறித்துக் கொடுத்தால் ராசி என்று கூறுகிறார்களே! மூலிகை பறித்துக் கொடுத்தால் ராசி என்று கூறுவது சரியா? இது சாத்தியமாகுமா?

         கைராசி என்பதும் உண்மையே. ஆனால் ஒவ்வொரு மூலிகையையும் பறிக்கும் பொழுதும் அதற்கென்று உள்ள முறையில் காப்புக் கட்டி, சாப நிவர்த்திகளைச் செய்து பறித்தால் அம் மூலிகைக்கு அதிக சக்தி கிடைக்கும். இவ்வாறு முறைப்படி மூலிகைகளைப் பறித்தாலும், நோய் உடனே குணமாக வேண்டும் என்ற எண்ணத்தோடு பறிக்கும் பொழுதும் அம் மூலிகைக்கு அதிக சக்தி உண்டாகும். இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

மூலிகைகளை பறிக்கும் முறை

           கிழக்கே , சூரியகலை, மேற்கே சந்திரகலை, எனது குருநாதர் ஆணைபடி கட்டினேன். முன் கட்டும் கட்டினேன். பின்கட்டும் கட்டினேன். மூலிகைகளை பறிக்கும் பொழுது காலையில் கிழக்கில் நின்று கொண்டு மேற்கே பார்த்தும், மாலையில் மேற்கே நின்று கொண்டு கிழக்கே பார்த்தும் பறித்தால் அம்மூலிகைக்கு உயிர் உண்டு. மேலும் தெற்கு திசையில் நின்று கொண்டு வடக்கு பார்த்து பறித்தால் இன்னும் சிறப்பு.

          அம்முலிகைகளை அமாவாசையும், ஞாயிற்றுக் கிழமையில் சேர்ந்த நாளில் பறித்தால் அதிக பலன் உண்டு. அன்று பூச நட்சத்திரம் என்றால் மிகவும் அதிக பலன்கள் உண்டு.

            அமாவாசையன்று பறிக்கும் மூலிகைகளுக்கு ஆறுமாதம் வரை சக்தி இருக்கும். மற்ற நாட்களில் பறித்தால் இரண்டுமாத காலம்  மட்டுமே பலன் தரும். சூரிய கிரஹணம் அன்று காப்புக் கட்டி பறித்தால் இரண்டு வருடம்  முதல் இரண்டரை ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல்  இருக்கும்.

           தை மாதம் முதல் தேதியில் ஒரு மூலிகைக்கு காப்பு கட்டிப் பறித்தல் அந்த மூலிகைக்கு உன் வாழ்நாள் முழுவதும் சாவ நிவர்த்தியும் காப்புக் கட்டவும் தேவையில்லை. இது அனைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும்.

           இல்லையெனில் ' வங் - யங் - சிங் - நசி - மசி - மசி - மசி ' இப்படி காலை எழுந்தவுடன் காலை கடன்களை  முடித்து விபூதியை எடுத்து சூரிய பகவானை திரிசித்துவிட்டு நெற்றியில் திலகமிட்டு, மேற்கண்ட மந்திரத்தை பதினாறு முறை தினமும் செபித்து வர எந்த மூலிகைக்கும் (20 லட்சம் மூலிகைகளுக்கும்) சாப நிவர்த்தி செய்ய வேண்டியதில்லை. நோய்கள் குணமாக சூரியன் இறங்கும் பொழுதில் பறித்தாலும் , அன்று தேய்பிறை இருந்தாலும் நோய்கள் விரைவில் குணமாகும். நோயாளிகளுக்கு தேய்பிறையில் மூலிகைகளைக் கொடுக்க அதிக பலன் தரும்.

         சூரிய கலையில் ஓடும் பொழுது மருந்தை அருந்த சொன்னால் மிக்க நன்று. மூலிகை வேலை செய்யும். மருந்து கொடுக்கும் பண்டிதர் மேற்கு பக்கம் நோக்கி நின்று மருந்து கொடுத்தால் உடன் வேலை செய்து நோய் விரைவில் குணமாகும். நோயாளி கிழக்குப் பக்கம் திரும்பி நின்று மருந்து வாங்கினால் அதிக பலன் தரும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home