Friday, 26 February 2016

ஞாபக சக்திக்கு எளிமையான மருந்து

* சுக்கு , திப்பிலி, ஓமம், வெண்சீரகம் மஞ்சள் மரமஞ்சள் வசம்பு கோஷ்டம் சயிந்தலவணம் அதிமதுரம் இவைகளை சமனாய் சேர்த்துப் பொடித்து  சூரணஞ்செய்து அதில் வெருகடிவீதம் காலை மாலையில் வெண்ணையில் ஒரு மண்டலமுண்டு வரவும்.

  * சஞ்சீவி சூரணம், சதகுப்பை - 40 கிராம், சீரகம் - 40 கிராம், மகிலம் விதை - 40 கிராம், அதிமதுரம் - 40 கிராம், சன்னலவங்கப்பட்டை - 40 கிராம், தேத்தான் விதை - 20 கிராம், தனியா (கொத்தமல்லி ) - 1/4 கிலோ, சீனிச்சக்கரை - 1/2 கிலோ இவை அனைத்தையும் நன்றாக காயவைத்து இடித்து பொடி செய்து, சர்க்கரை கலைந்து புதிய களையம் வைத்துக்கொண்டு , வெறுகடி பிராமனம் காலை மாலை இருவேளையில் சாப்பிட தேகம்திடப்படும்.

தீரும்நோய்கள்

* ஈரல் வலுவு கொடுக்கும், பித்தத்தைப் போக்கும்,

* நெஞ்சு திடப்படும், மூளை வளர்ச்சியடையும்

* தலைவலி, பிடரி நோய், கண்களில் நீர் வடிதல்

* இருதயம் கலிப்படைதல், நல்ல பார்வை

* பசி அதிகரிக்கும், நல்ல தூக்கம்

* வயிற்றில் உள்ள பிணிகளும் நங்கும்.

* வயிற்றுக்கிருமிகள் அனைத்தும் அழியும்

* கல்லடைப்பு , நீர்கட்டு , இடுப்பு வலி தீரும்

* வாய் குழறல் மாறும், பேய்குணம் மாறும்.

* காதுகள் நன்றாய் கேட்கும்,

* தொண்டை புண், சளி மாறும்

* வாய், மூக்கில் புண்கள் ஆறும்.

*சூடு குறையும், ஞானம் உண்டாகும்.

* நல்ல எண்ணங்கள் உதிக்கும்.

* பெரியோர்களை மதிக்கச்  சொல்லும்

* பூமியில் வல்லவனாகி சரஸ்வதி நாவில் அமர்வாள்

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்து கொள்ளளாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home