மூலிகைக்கு காப்பு கட்டும் முறை
மூலிகைக்கு ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய் கிழமை , வியாழக்கிழமை இம் மூன்று நாட்கள் தான் காப்பு கட்ட வேன்டும். மூலிகைக்கு காப்பு கட்டுவதற்கு முன்பு அந்த மூலிகையைச் சுற்றி சுத்தம் செய்து, மூலிகையின் மேல் மூன்று முறை மஞ்சள் பொடி கலந்த தண்ணீரைத் தெளித்துவிட்டு பின் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, சூடம் வைத்து படைத்து ஐந்து எலுமிச்சம் பழத்தை அறுத்து அதில் குங்கும் தடவி எட்டு திசைகளுக்கு போட்டு வானத்துக்கும் பூமிக்கும் சேர்த்து மொத்தம் பத்து திசைகளுக்கு திசைக்கட்டு கட்டவும். மூலிகையின் அருகில் ஒரு எலுமிச்சம்பழத்தை வைக்க வேண்டும். பின் கன்னிகழியாத பெண்ணிடம் பருத்திப் பஞ்சை கொடுத்து அதை நூலாக திரிக்கச் சொல்லி, அந்த நூலில் முனை முறியாத மஞ்சளைக் கட்டி, அதை கிழக்கு அல்லது வடக்கு பக்கம் பார்த்தவாறு நின்று கொண்டு மூலிகையின் அடிப்பாகத்தில் ஒரு முறை மந்திரம் சொல்லி ஒரு முடிச்சும், இரண்டாவது முறை மந்திரம் சொல்லி இரண்டாவது முடிச்சும், மூன்றாவதுமுறை மந்திரம் சொல்லி மூன்றாவது முடிச்சும் போட்டு, ஒரு மந்திரத்தை மூன்று முறை சொல்லி காப்பு கட்ட வேண்டும். இந்த ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டுகிறோம் என்றால் அடுத்த ஞாயிற்றுக் கிழமை மூலிகையில் அருகம்புல் சாத்தி, திருநீறு போட்டு , தூப தீபம் காட்டி மூலிகையை பறிக்க வேண்டும். இதுவே மூலிகைக்கு காப்பு கட்டும் முறை. மூலிகைகளுக்கு காப்பு கட்டும் பொழுது மஞ்சளில் விநாயகர் பிடித்து அம் மூலிகையின் அடியில் வைத்து காப்பு கட்ட அதிக பலன் தரும்..
மூலிகைகளின் சாப நிவர்த்தி நாளை பார்ப்போம் .....

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home