Tuesday, 16 February 2016

சொற்பனவிதி அல்லது கனவை பற்றி : அனைவருக்கும் பயனுள்ளவாறு பகிர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்

ஆண்டிவேடம் பூண்டு யாத்திரை செல்லுதல்

காசி க்ஷேத்திரம் போய்வருதல்

மரக்கலத்திலேறி தூரதேசம் சென்று வருதல்

நெருங்கிய பந்துக்கள் கொடிய பகையாதல்

மலத்தில் சறுக்கி விழுந்தெழுந்து மனை சேர்தல்

புராணகாலக்ஷேபங்கள் செய்தல் கேட்டல்

ஆகாயம் கைக்குயெட்டும் படிகாணுதல்

வேட்டையாடக் காணுதல்

இளநீர் கரும்பு கண்ணாடி இவைகாணல்

வெற்றிலை பாக்கு மஞ்சள் வாங்குதல்

சோலைகளிற்சென்று மலர்கொய்தல்

வீடு பற்றிஎரிதல்

             இம்மாதிரி சொற்பனங்கள் காணுவார்களாகில் மிகவும் விசேஷ பொருள் வரத்து, கல்யாணம் முதலிய நற்காரியங்கள் தன்னால் நடைபெறுவதுடன் அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

           யாதொரு பிரயாணமாவது நடக்கும் போது தன்னுடைய நிழல் தனக்கு தெரியாதிருந்தபடி கனவு காண்பாராகில் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்குமென்பர். கண்ணாடி யெடுத்து முகம் பார்க்கையில் தன்னுடைய சிரசு தெரியாதபடி அல்லது கழுத்தளவாயுள்ள முண்டம் மாத்திரம் கண்ணாடியில் தோன்றின படி கனவு காண்பார்களாகிலும் பண்டாரம் அல்லது சன்னியாசியை நிச்சன்மயிர் பிடித்திழுக்கும்படி கண்டாலும் ஒரு வருக்ஷத்திற்குள்ளாக மரணமென்பர்.

            ஒருவனை ஆந்தை அலறியபடி விரட்டிக் கொண்டு வருவது போல் கனவு கண்டால் அவனுக்கு மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.

          தன்னுடைய மூக்கு நுனியை ஒருவன் பார்க்கும் போழுது மூக்கு நூனி கண்ணுக்குத் தெரியவில்லை எனில் மூன்று நாட்களில் மரணம் ஏற்படும்.

             ஆகாயத்தில் பறந்து செல்வது போல் கனவு கண்டால் ஆயுள் அதிகம் என்று அறிக.

             கை, கால்களில் சொடக்கு (நெட்டை) போடும் பொழுது  சொடக்கு விழவில்லை எனில் அவனுக்கு இரண்டு நாட்களில் மரணம் ஏற்படும்.

            ஒரு பெண் கருப்பு சேலை உடுத்தி தன் தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு, வீட்டு வாசலில் உள்ள திண்ணைக்கருகில்  ஒரு கம்பை பிடித்துக் கொண்டு வீட்டைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தால்  மறுநாளே இறந்து விடுவான்.

            பூஞ்சோலை - பாதரக்ஷை , யானை, குதிரை , மலைகள், தீபம், சங்கு, சூரியன், சந்திரன், அத்திமரம், புளியமரம், ஆலமரம்,  புன்னைமரம், கனிவர்க்கம், பயிர்நாற்று , மலம், எலும்புக் கூட்டம், மழை பெய்தல், வெள்ளை வஸ்த்திரம் , தாசி வீட்டிற்கு போகுதல், மலையேறுதல், பாண்டவர் கதைபடித்தல், கேட்டல், இவைகளில் வெற்றையேனும் சொற்பனத்தில் காணுவார்களாகில் சுபகாரியங்கள் சவுக்கியம் முதலிய நன்மைகள் கூடுமென்று அறிக

            எண்ணெய் அல்லது எண்ணையிட்டு ஸ்நானம் செய்த வானரக் கூட்டம், வானத்து முதுகிலேறி வழி நடத்தல், பிணத்தை மிதித்தல், விறகு முதலிய சுமையெடுத்தல், காகத்தைக் காணல், அழைத்தல், பன்றிகளைக் காணல், எருமை நாய், புலி, பருந்து கைம் பெண்ணைப் புணர்தல், வானம் இடிந்து விழுதல் , விவாகம் செய்தல், ஈரத்துயிலுடுத்தல், பிராமணவாசம், யானை தவறிவிழுதல், இராட்சதர் (லயம்) அம்பு, ஈட்டி, கத்தி - வில் இவைகளில் எதுவாகிலும் சொற்பனத்தில் காணுவார்களாகில் விசனம், அசவுக்கியம், வியாதி சம்பவம், சத்துரு விவகாரம், தூரத்து மரண செய்தி இவைகள் கேட்கவும், அல்லது அனுபவிக்கவும் நேரிடும்.

            பதினான்கு வயது பெண்ணை உடலுறவு கொள்வது போல் கனவு காண்பாராகில், அவன் உடலுக்குள் உள் வியாதிகள் அதிகம் என்று அறிக.

நல் எண்ணம் , சிந்தனை கொண்பவர்க்கு நல்ல கனவுகள் தான்.

எண்ணுவது போல் வாழ்க்கை.

இந்த தகவல் அனைத்து ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

உங்கள் கருத்துக்களை வரவேற்க்கபடுகிறது .

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home