பழமொழிகளின் உண்மை ரகசியம் : மற்றவர்களுக்கு பயனுள்ளவாறு பகி்ர்ந்து மகிழ்வித்து மகிளுங்கள்
" காற்று உள்ளபோதே தூற்றிக் கொள் " என்று போகர் சித்தர் கூறினார்.
அது என்னவென்றால், ஒரு நாளைக்கு 21600 சுவாசம் இருக்கும். அந்த சுவாசத்தை (காற்றை) 40 வயதுக்குள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டால் உடம்பு காயகல்பம் ஆகும். ஆயுள் நீடிக்கும்.
நடை முறை மாற்றம்
சந்தர்ப்ப சூழ்நிலையை வைத்து காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்று இப்பொழுது கூறுகின்றோம்.
"அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் "
அடி என்பது சிவன். அண்ணன் தம்பி என்பது விநாயகர், முருகன். நம் ஆத்திர அவசரத்திற்கு உதவுகின்ற மாதிரி விநாயகரும், முருகனும் உதவ மாட்டார்கள். இதுதான் அர்த்தம்.
"ஜனிநீராடு"
ஜனிநீர் என்பது தினமும் ஜனிக்கக்கூடிய நீர். அன்றாடம் பிறக்கக் கூடியது என்று அர்த்தம். அன்றாடம் ஜனிக்கக் கூடிய நீரில் (ஊற்று நீர்) குளிக்க உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதே இதன் அர்த்தம்.
இந்த தகவல் அனைத்து ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகிறது .
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home