எறும்புக்கு அரிசிமாவில் உணவு அளித்தால் கிடைக்கும் செல்வசெழிப்பும்.
எறும்புக்கு அரிசிமாவில் உணவு அளித்தால் கிடைக்கும் செல்வசெழிப்பும்.
உலகில் உள்ள ஜீவராசிகளில் மிகவும் உன்னதமான பிறவி மனிதப் பிறவி என்று கூறுவர். ஆனால் இந்த மனிதப் பிறவிதான் மற்ற ஜீவராசிகளைக் காட்டிலும் அதிகம் துன்பப்படுகின்றது. கிரகங்கள்கூட மனிதப்பிறவியைக் தான் ஆட்டுவிக்கின்றன. மனிதப் பிறவி துன்பப்படுவதற்கு காரணம் என்ன? தற்பொழுது ஒவ்வொரு கோயிலுக்கும் சென்று மக்கள் பரிகாரம் செய்கின்றனர். பரிகாரம் செய்வது பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
மனிதப் பிறவி அதிக துன்பப்படுவதற்கு காரணம் பகுத்தறிவே. எப்படி யெனில் மற்ற ஜீவராசிகளுக்கும் கிரக நிலை உண்டு. அதன்படியே அந்த ஜீவராசிகளும் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன. மற்ற ஜீவராசிகளுக்கு பகுத்தறிவு இல்லை. எனவே தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை அவைகள் உணர்வதில்லை. ஆனால் மனிதப் பிறவிக்கு பகுத்தறிவு உண்டு. எனவே தனக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை உணர முடிகிறது. மேலும் தனக்கு ஏற்படும் துன்பங்களைக் குறைக்க பரிகாரம் செய்வது பற்றி விரிவாகக் பார்ப்போம்.
சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று வன்னி மரத்தின் கீழுள்ள விநாயகர் முன்பு நின்று மாலையில் சந்திரம் உதயம் ஆகும் நேரத்தில் சந்திரனை பார்த்து தமக்கு உள்ள சங்கடங்களை சந்திரனிடம் சொல்லிவிட்டு அப்படியே விநாயகரைப் பார்த்து நின்று கொண்டு வன்னிமர இலையைக் கொண்டு விநாயகரிடம் தன்னுடைய துன்பங்களை சொல்லிக் கொண்டே அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு ஒன்பது மாதங்கள் வரை செய்து வர சங்கடங்கள் அனைத்தும் தீரந்து விடும்.
நாம் நோயினால் மிகவும் அவதிப்படுகிறோம் என்றால் இலுப்பை எண்ணெயில் தீபம் போட வேண்டும். இலுப்பை எண்ணெய்யில் பெருந்தும்பை இலையை பறித்து அந்த இலையை திரிபோல் நன்கு தரித்து தீபம் போட்டால் தீபம் பிரகாசமாக எரியும். பெருந்தும்பை பெருமாளுக்கு உரியதாகும்.
ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும் இந்த தலைமுறையில் நீங்கள் செய்த தெரிந்த பாவம், தெரியாத பாவம், அறிந்த பாவம், அறியாத பாவம், வாயால் பேசிய பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு சனிக் கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி அந்த அரிசியை விநாயகரைச் சுற்றி போட்டால் அதை எறும்பு சாப்பிட்டுவிடும். அப்பொழுது அனைத்து பாவங்களும் போய்விடும். எப்படி என்றால், ஒரு மனிதனை யானை மிதித்து தாண்டி இரண்டடி தூரம் போய் பார்த்தால் மனிதன் நசுங்கி விடுவான். நமக்கு யானை எவ்வளவு பெரியதாக தெரிகின்றதோ அதே போல்தான் எறும்புக்கு நாம் மிகப் பெரிய உருவமாக தெரிவோம். ஆனால் நாம் எறும்பை மிதித்து இரண்டடி தூரம் போய் பார்த்தால் எறும்பு எழுந்து ஊர்ந்து போய்க் கொண்டு இருக்கும். தீய சக்திகள் எது பட்டாலும் அது சாகாது. மனிதன் இரண்டு நசுக்கு நசுக்கினால்மட்டுமே சாகும்.
நாம் அதற்கு பச்சரிசியை உணவாக கொடுத்தால் நம்மிடம் உள்ள பாவங்களும் பீடைகளும் போய்விடும். அது எவ்வாறெனில் எறும்புகள் நாம் போட்ட பச்சரிசியை உடனே சாப்பிடுவதில்லை. அதை தன் கூட்டிற்கு கொண்டு போய் மழைக் காலத்தில் வைத்து சாப்பிடுவதற்கு வைத்துக் கொள்ளும். மேலும், இவ்வாறு அரிசியை எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளும். இதனை சாப்பிடுவதற்கு இரண்டேகால் வருடம் ஆகும். அதனுடைய எச்சில் பட்ட உடனே அந்த அரிசியும் எப்பவும் கெட்டுப் போகாமல் புது அரிசி போல இருக்கும். இதை நீங்களே கண்கூடாக காணலாம். இரண்டேகால் வருடம் அந்த எறும்புக் கூட்டில் பச்சரிசி இருப்பதால் முப்பத்தி முக்கோடி தேவர்களும் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
அந்த கிரக நிலை மாறியவுடன் அதன் வலு இழந்து போய் விடும். இதையெல்லம் அறிந்த முன்னோர்கள் எறும்புக்கு அரிசியை உணவாக போடுங்கள் என்றார்கள். ஏன் அவ்வாறு கூறினார்கள் என்றால் ஒர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்கு அர்த்தம். இதனால் தான் பச்சரிசி கோலங்கள் போடுங்கள் என்று கூறினார்கள். ஏன் என்றால் நாம் போட்ட அரிசி இரண்டேகால் வருடத்திற்கு அதன் கூட்டில் இருக்காது. நமக்கு இரண்டே கால் வருடத்திற்கு எந்த கஷ்டமும் இல்லாமல் நிம்மதியாக இருப்போம். எப்படி என்றால் நாம் எறும்புக்கு படி அளந்த அரிசி அதன் கூட்டில் இருக்கும். சனி பகவான் நமக்கு படி அளக்காமல் இருந்தால் முப்பத்தி முக்கோடி தேவர்களும், அவன் எறும்புக்கு படி அளந்த உணவு அதன் கூட்டில் உள்ளது. ஆதலால் நீ அவனுக்கு எந்த கஷ்டமும் கொடுக்கக் கூடாது என்று முப்பத்தி முக்கோடி தேவர்களும் கூறிவிடுவார்கள். ஆறு மாதத்திற்கு முன்னே சனி பகவான் வலு இழந்து விடும். கிரக நிலை மாறிவிடும். ஆதலால் இறைவன் நமக்கு தினமும் படி அளந்து எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். இந்த பதிவை பார்த்தாவது அனைவரும் வீட்டிற்கு முன்பு பச்சரிசி மாவினால் கோலங்கள் போடுவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். அது மட்டும் இல்லாமல் உங்கள் கர்ம வினைகள் அகல வேண்டும் என்றால் இன்னும் ஒரு வழி உண்டு.
உங்களுடைய நட்சத்திரத்திற்கு. ஏற்ற மரங்கள் உண்டு. அந்த நட்சத்திரத்தின் அமைப்பு ஜாதகத்திற்கு பொருந்தும். நாம் திருமணம் செய்யும் பொழுது நமக்கு வரும் மனைவியின் நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் நமக்கு உரிய மரங்களுக்கு பொருந்துமா என்று ஜாதகக்காரர்கள் பார்ப்பார்கள். நம் பெயருக்கு உரிய நட்சத்திரத்திற்கு ஏற்ற மரங்களை நாம் வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ ஊன்றி வளர்ந்தால் முதலில் நம்முடைய ஜாதகம் பேசும். பின்பு நம் மூத்த மகனின் ஜாதகம்தான் பேசும். அதே போல் நம்முடைய பீடைகள் அனைத்தும் நாம் வளர்க்கும் உயிருள்ள மரத்திற்கு தொத்திவிடும். இது போன்ற மரங்களை ஆலயங்களைச் சுற்றி வைத்து வளர்த்தால் மிகவும் நல்லது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home