Wednesday, 2 March 2016

நரைபிடுங்கும் முறை

நரைபிடுங்கும் முறை

   நம் முன்னோர்கள் எந்த நாகரீகமும் இல்லாத காலத்தில் நமது நகத்தை பார்த்து நமக்கு நோய் இவ்வளவு இருக்கு என்று கூறிவிடுகிறார்கள். நமது நாடியை பார்த்தும் கூறிவிடுகிறார்கள். நம் கண் இமைகளில் கீழே உள்ள பட்டை வெள்ளையாக இருந்தால் இரத்தம் குறைவாக இருக்கிறது என்றும், பட்டை சிகப்பாக இருந்தால் இரத்தம் தேவையான அளவு இருக்கிறது என்று கூறிவிடுகிறார்கள். அதே போல் 5 வயது, 7 வயது ஆகியும் தேகம் ஒல்லியாக இருந்தால் முதுகுப் பின்புறம் கிருமிகள் அதிகமாக உள்ளது என்றும் கூறுகிறார்கள். அந்த கிருமிகளை எவ்வாறு அகற்றுவது, அந்த கிருமிகளை அகற்றும் முறையை பார்ப்போம்.

        இமை வெள்ளையாக இருந்து தேகம் ஒல்லியாக இருந்தால் அவன் உடம்பில் கிருமிகள் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். அவர்களை குப்புறபடுக்க வைத்து இரண்டு செம்பு தண்ணீர் ஊற்றி முதுகை நன்கு கழுவி பின் கரக்காய் இலையை அரைத்து முதுகு முழுவதும் பூசி ஐந்து நிமிடம் கழித்து அதை ஒரு செம்பு தண்ணீர் ஊற்றி கழுவி பின் ஈனாத எருமை சாணியை எடுத்து நன்கு பூசி மூன்று நிமிடம் கழித்து பின் இரண்டு செம்பு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி பின்பு மஞ்சள் பொடியை முதுகு முழுவதும் பூசி விட்டு பார்த்தால் முதுகில் கருப்பாக கிருமிகள் மஞ்சளுக்கு மேல் வெளியே வரும். உடனே அதனை பிடுங்கி வெளியே எறிய வேண்டும். இவ்வாறு கிருமியை பிடுங்கும் முறையே நரைபிடுங்கும் முறை ஆகும். இவ்வாறு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நரை பிடுங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை நன பிடுங்கி விட்டால் உடம்பு பூரிக்கும். இது 10 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு மட்டுமே இக் கிருமிகள் இருக்கும். 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்பட்டை வெள்ளையாக இருந்தால் அவர்களுக்கு இரும்புச் சத்து குறைவாக இருக்கிறது என்று அறிக.

        தமிழகத்தில் தென்நாட்டில் மதுரை , விருதுநகர் மாவட்டத்தில் பேரையூர், எரிச்சநத்தம் போன்ற பல்வேறு இடங்களில்  இம் முறையில் நரை பிடுங்கும் வைத்தியர்கள் உள்ளனர். இம் முறையை நீங்களே கூட கையாளலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home