Thursday, 3 March 2016

மருத்துவக் கல்வியின் அங்கமே ஜோதிடம்!

மருத்துவக் கல்வியின் அங்கமே ஜோதிடம்!

       மருத்துவம், ஜோதிடம், வான சாஸ்திரம் ஆகிய மூன்றும் மிக மிகத் தொன்மையான கலைகளாகும். மிகத் தொன்மையான காலத்தில் வான சாஸ்திரம் தெரிந்தவரே ஜோதிடராகவும் மருத்துவராகவும் இருந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் மந்திர, தந்திரங்களும் அதில் இணைந்து கொண்டன.
         ஒரு மருத்துவர் மருத்துவம்  மட்டுமின்றி , ஜோதிடம் , மந்திரதந்திரங்கள், வான சாஸ்திரம் ஆகிய அனைத்தையும் கற்றுக் கொள்வது ஒரு காலத்தில் கட்டாயமாக இருந்தது. பெரும்பாலான பண்டைய நாகரீகங்களில் மருத்துவரே ஜோதிடராகவும் , கோவில் பூசாரியாகவும், அரண்மனை மந்திரவாதியாகவும் இருந்திருக்கிறார்கள்.
       ஆப்பிரிக்க பழங்குடியினரிடையே மெடிசின் மேன் (medicine Man) என்று அழைக்கப்படும் மருத்துவருக்கு இன்றும் மிகப் பெரிய மரியாதை உண்டு. குழுவுக்குத் தலைவன் என்று ஒருவன் இருந்தலும், இந்த மருத்துவரின் வார்த்தைக்குத் தலைவனும் கட்டுப்பட்டே ஆக வேண்டும்! பண்டைய சிவப்பிந்தியர்களிடையிலும் மருத்துவரே முதன்மையானவராகக் கருதப்பட்டார். அவரது பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது.
         நமது பாரம்பரிய  மருத்துவ முறைகளான ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும்கூட ஒரு மருத்துவர் ஜோதிடம், மந்திர , தந்திரங்கள் ஆகியவற்றையும் கற்றுத் தேறியிருந்தால் மட்டுமே அவர் ஒரு முழுமையான மருத்துவராகக் கருதப்பட்டார். பண்டைய காலத்தில் ' ஜோதிடம் ' என்பது மருத்துவக் கல்வியின் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home