Wednesday, 9 March 2016

பனை மரத்தின் இயற்கை பானத்தின் மகிமை

பனை மரத்தின் இயற்கை பானத்தின் மகிமை

பனை மரத்தை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து வரும் பதனீரில் உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்கள் அதிக அளவில் கலந்துள்ளன. அவைகள் என்னவென்று பார்ப்போம்.

ஒரு தம்ளர் பதனீரில்,

சர்க்கரை                       =     2.8  %
கால்சியம்                     =    35.4 %
இரும்பு                          =     5.5 %
பாஸ்பரஸ்                    =      32.4 %
தயாமின்                      =      8.2 %
ரி பேஃபிளாவின்       =      4.4 %
அஸ்ப்ராபிக் அமிலம் =     1.2 %
புரோட்டீன்                   =     4.9 %
மற்றவை                      =     5.2 %

     மேலும் வைட்டமின்கள் சி, பி, பி காம்ப்ளக்ஸ் நைட்ரஜன், குளுக்கோஸ், உள்ளிட்டவையும் உள்ளன. இப்படி உடலுக்குத்  தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள கள், பதனீரை அருந்துவதில் பாதிப்பு ஏதுமில்லை. மரத்திலிருந்து இறக்கப்பட்ட சிறிது நேரத்தில் அருந்துவதால் பாதிப்பு இல்லை. மரத்திலிருந்து எடுக்கப்பட்ட அதிக நேரம் ஆன கள், பதனீரை சாப்பிட்டால் மட்டுமே பாதிப்பைத் தரும். எனவே அதிக பாதிப்பைத் தரக்கூடிய மது வஸ்துக்களை சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் உடலைப் பேணி காப்போமாக!

       எல்லா மரங்களிலும் புல்லுருவிகள் இருக்கும். அதை பார்ப்பது அபூர்வமாக இருக்கும். ஆனால் படத்தில் பார்ப்பது பனை மரத்தில் இருக்கும் மிக மிக அபூர்வமான புல்லுருவி. இதற்கு செவிட்டு ஓலை என்று பெயர். ஏன் இதற்கு இப்படி பெயர் வந்தது என்றால் பிறக்கும் செவிடாக பிறக்கும் குழந்தைக்கு வலம்புரிர்க்காய் - 5, இடம்புரிக்காய் - 5 ஒரு கை அளவு செவிட்டு ஓலை, இரண்டு பல் பூண்டு நான்கையும் 1/2 லிட்டர் வேப்ப எண்ணையில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இந்த எண்ணையை காதில் நான்கு சொட்டு வீதம் ஊற்றிவர காது நன்றாக கேட்கும்.

       ஆதலால் இதற்கு செவிட்டு ஓலை என்று பெயர் வந்தது. இதை சித்தர்கள் அனுபவத்தில் கொடுத்து குணமான மூலிகையை அறிந்து உள்ளர்கள். இது அனைத்து இடங்களிலும் கிடைக்காது. பல இடங்களுக்கு அலைந்து திரிந்து அதிக சிரமப்பட்டு மக்கள் நலனுக்காக இதை படம் பிடித்து காட்டியுள்ளோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home