தவறான உணவுப் பழக்கங்கள்
தவறான உணவுப் பழக்கங்கள்
தவறான உணவுகளை, தவறான வேளைகளில் உண்பதும் நோய் உருவாக ஒரு முக்கிய காரணமாகிறது. தவறான உணவுப் பழக்கங்களால் நமது ' அன்ன மய கோசம் என்ற சக்தி உடலில் சக்தித் தடைகளும் தேக்கங்களும் உருவாகின்றன. நாளடைவில் இதுவே நோய்களாக பருவுடலில் பிரதிபலிக்கின்றன.
ஒவ்வொருவரும் தங்களது உடற்கூறின் அடிப்படையில் (வாதம், பித்தம், கபம்) உணவு உண்ண வேண்டும் என ஆயுர் வேதம் வலியுறுத்துகிறது. வாத உடல் உள்ளவர்கள் உண்ண வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? பித்த உடல் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவுகள், ஏற்றுக் கொள்ளாத உணவுகள் எவை? கப உடல்வாகு உள்ளவர்கள் எதை உண்ண வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும் என்பனவற்றை எல்லாம் ஆயுர்வேதத்தில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.
கோடை காலத்தில் உண்ணத்தகுந்த உணவுகள், குளிர் காலத்தில் உண்ணத் தகுந்த உணவுகள், இரவு நேரத்தில் உண்ணத்தகாத உணவுகள், அமிலத்தன்மை கொண்ட உணவுகள், காரத்தன்மையுடைய உணவுகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற உணவுகள் என பலவகையான உணவுப் பட்டியலை நம் முன்னோர்கள் தந்துள்ளனர். அவற்றை சரியாகக் கடைப்பிடித்து வந்தாலே நோய்கள் அணுகாது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home