Sunday, 6 March 2016

முத்திரை சிகிச்சை சில அடிப்படைத் தகவல்கள் :

முத்திரை சிகிச்சை சில அடிப்படைத் தகவல்கள் :

     நவீன விஞ்ஞான மருத்துவம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துவிட்ட இந்த கால கட்டத்தில்கூட கோடிக்கணக்கான மக்கள் பலவகையான நோய்களால் வருடக் கணக்கில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய நாள்பட்ட நோய்களுக்குக்கூட முத்திரைப் பயிற்சிகளின் மூலம் நல்ல பலனைப் பெற முடியும்.
        சில வகையான நாள்பட்ட நோய்கறை (Chrone diseases) முத்திரைப் பயிற்சியின் மூலமாக முற்றிலுமாகக் குணப்படுத்திவிட முடியும். சில வகை நோய்களை முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும்கூட நோயின் தீவிரத்தைக் குறைக்க முடியும். மேலும் அந்த நோய் முற்றிவிடாமல் தடுக்க முடியும்.
        ஆனால் எந்த நோய்க்கு முத்திரைக் கிகிக்சையை மேற்கொள்வதாக இருந்தாலும், சில அடிப்படையான விஷயங்களை மனதில் நிறுத்திக் கொள்வது அவசியம்.
     * முத்திரைப் பயிற்சிகள் எந்த சிகிச்சை முறைக்கும் எதிரானது அல்ல.

    * மருத்துவ சிகிச்சைகளுக்கு மாற்றாக முத்திரை பயிற்சிகளை பயன்படுத்துவது தவறு.

      * மருத்துவ சிகிச்சைகளோடு முத்திரைப் பயிற்சிகளை ஒரு துணை கிசிக்சையாக (Supportic Therapy) மேற்கொள்வதே அறிவுடமை.

       * உங்களது மருத்துவரின் அறிவுரையோடு நீங்கள் எடுத்துக் கொண்டிக்கும் வழக்கமான மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.

      * முத்திரைப் பயிற்சிகளின் மூலம் நோயின் தீவிரம் குறையக் குறைய - உங்களது மருத்துவரின் அனுமதியோடு மருந்து, மாத்திரைகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ளலாம்.

      * நோய் முற்றிலுமாகக் குணமாகிவிட்டதாக நீங்கள் உணர்த்தால்கூட, உங்களது குடும்ப மருத்துவரை அல்லது உங்களுக்கு சிகிச்சை அளித்து வரும் சிறப்பு மருத்துவரைக் சந்தித்து தகுந்த பரிசோதனைகளைச் செய்து, நோய் முற்றிலுமாக குணமாகிவிட்டதை உறுதி செய்வது அவசியம்.

       * அதன் பின்னரே உங்களது  மருத்துவர்  அனுமதித்தால் மட்டும் மருந்து, மாத்திரைகளை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளலாம்.
        நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையைத் துவங்கும்போது முத்திரைப் பயிற்சிகள், மருந்து, மாத்திரைகள் இவற்றோடு மேலும் சிலவற்றிலும் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். அவற்றைக் குறித்து சுருக்கமாகக் காணலாம்.

              1. உணவு முறை

        பல நாள்பட்ட நோய்களுக்கு உங்களது தவறான உணவுப் பழக்கங்களே மூலகாரணமாக அமைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
       உணவு முறைகளை சரி செய்துவிட்டாலே பல நோய்களின் தீவிரம் கணிசமாகக் குறைந்துவிடும். ' உணவே மருந்து ' என்பது மிகவும் பொருள் நிறைந்த ஒரு வாசகம்.
        நவீன உணவு முறைகளைத் தவிர்த்து பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறுங்கள். உப்பு, சர்க்கரை , எண்ணெய் போன்ற வற்றைக் கணிசமாகக் குறைத்துவிடுங்கள். ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்ட எந்த உணவையும் உண்ண வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அசைவம் உண்பவர்கள் அதை அளவோடு உண்ண வேண்டும். சமைத்த உணவுகளை நான்கு மணி நேரத்திற்குள் உண்டுவிட வேண்டும். உண்ட உணவு செரிமானம் ஆன பின் மட்டுமே அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும்.

                 2. தண்ணீர்

        உண்ட உணவு செரிமானமாகவும், உடலில் உருவாகும் கழிவுப் பொருட்கள் வெளியேறவும், செல்களின் நலமான இயக்கத்திற்கும் தண்ணீர் மிக மிக அவசியம். ஒரு நாளில் குறைந்தபட்சம் 10 முதல் 12 டம்ளர்கள் (இரண்டு அல்லது இரண்டரை லிட்டர்கள். தண்ணீர் அருந்துவது அவசிவம். ஒரே நேரத்தில் அதிகமாக அருந்துவதும் தவறு. காலை முதல் இரவு வரை அவ்வப்போது அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் என அருந்திக்கொண்டே இருங்கள்.

             3. உடல் உழைப்பு

     உடல் உழைப்பு இல்லாமையும்கூட பல நாள்பட்ட நோய்கள் உருவாகக் காரணமாகிவிடுகிறது. ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலையில் உள்ளவர்கள் கட்டாயமாக உடற்பயிற்சிகள் செய்வது அவசியம். யோகாசனப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு, தொடர்ந்து செய்து வந்தால் பலன் மிக அதிகம். பல நோய்கள் அருகிலேயே வராது!

              4. ஓய்வு, தூக்கம்

        உடல் உழைப்பு உடற்பயிற்சிகளும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவில் தேவையான ஓய்வும் உறக்கமும் முக்கியமானவை. ஓயாத உழைப்பும் நோய்களுக்கு அச்சாரமிடும். தினசரி ஆறு முதல் ஏழு மணிநேரத் தூக்கம் அவசியம். வாரம் ஒரு நாள் உங்கள் வேலைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒய்வெடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

     5. அமைதியான மனநிலை

        உயர் ரத்த அழுத்தம். நீரிழிவு நோய், இதய நோய்கள், வயிற்றுப்புண்கள் போன்ற பல நாள்பட்ட நோய்களுக்கு பரபரப்பான வாழ்க்கை முறையும், மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவையும் மிக முக்கியமான காரணங்களாகும். மனதில் தேங்கி நிற்கும் எதிர்மறையான எண்ணங்களும் கூட (Negative thoughts) நோய்களை உருவாக்கும்.
       தியானம், முத்திரைப் பயிற்சிகள் மூலம் அமைதியான மனநிலையை உருவாக்கிக் கொண்டாலே பல நாற்பட்ட நோய்கள் மறைந்துவிடும்! இதற்கான முத்திரைகள் குறித்துப்  பின்னர் விரிவாகக் காணலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home