கடுக்காய்களின் மகிமையும் , மருத்துவமும்
கடுக்காய்களின் மகிமை
(1 ) அரோசினிக் கடுக்காய்
அரோசினிக் கடுக்காயால் ஜன்னியும், பேதியும் நீங்கும். இது கன்னியாகுமரி தேசத்தில் உற்பத்தியாகிறது.
(2) பிருதிவி கடுக்காய்
பித்த நோயை நீக்கும். ஆயுளை விருத்தி செய்யும். இது செளராஷ்டிரா தேசத்தில் உற்பத்தியாகும்.
(3) அமிர்தக் கடுக்காய்
கண்டத்தில் ஒரு ஒலியைத் தருகின்ற சளியை போக்கும் .. இது காசி தேசத்தில் உற்பத்தியாகிறது.
(4) சிவந்திக் கடுக்காய்
வாத நோய்களை விலக்கும். இது வனங்களில் உற்பத்தியாகிறது.
(5) திருவிருத்திக் கடுக்காய்
(வெண்மை, கருமை , செம்மை, பசுமை, மஞ்சள் என்னும் பஞ்ச வண்ணமுடையது.)
சகல நோய்களையும் நிவர்த்தி செய்யும்.
இது மலைகளில் உற்பத்தியாகிறது.
(6) அபயன் கடுக்காய் ( கருமை நிறத்தை உடையது)
எலும்பு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். இது பொதிகை மலையில் உற்பத்தியாகிறது.
(7) சங்காகடுக்காய்
சிரமம் இல்லாமல் மலம் வெளிவரும். பகலில் உடலுக்கு அழகு தரும். புத்தியளிக்கும்.
(8) கருங்கடுக்காய்
இரண்டு அல்லது மூன்று நாட்கள் மலம் கழிக்காதவர்களுக்கு சிரமம் இல்லாமல் மலம் வெளிவரும். திரிதோஷங்களும் நீங்கும். அழகையும் கொடுக்கும்.
(9) செங்கடுக்காய்
அறிவு, இன்பம், கீர்த்தி சரீரத்தில் பொற்சாயல், பலவித இருமல் நீங்கும்.
(10) வரிக் கடுக்காய்
தேக புஷ்டி, தாதுவிருத்தி நன்கு சீரணமாகுதல், வாத பித்த தோஷங்களை அகற்றும்.
(11) பால் கடுக்காய்
வயிறு வலித்து மலம் இருப்பது ( வயிற்றுக் கடுப்பு) நீங்கும். தேகம் வெண்மையாகும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home