பஞ்ச பூதங்களும் மூன்று தோஷங்களும் நேற்றைய தொடர்ச்சி
பஞ்ச பூதங்களும் மூன்று தோஷங்களும் நேற்றைய தொடர்ச்சி
நேற்று இதயம், சிறுநீரகங்கள், நூரையீரல்கள் வரை பார்த்தோம் ...
ஒவ்வொரு உள்ளுறுப்பும் ஒரு பூதத்தின் ஆளுமைக்கு உட்பட்டதாகவே உள்ளது. உடலில் ஏற்படும் மாற்றங்கள், அறிகுறிகள் ஆகியவற்றை வைத்து எந்த பூதம் பழிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அது குறித்துப் பின்னர் விரிவாகக் காணலாம்.
இந்த பூதங்கள் ஐந்துமே ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தொடர்புள்ளவை. ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. ஒரு பூதம் குறைவுபட்டாலோ அல்லது அதிகமானாலோ, அது அந்த ஒரு பூதத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை. பிற பூதங்களிலும் அதன் தாக்கம் இருக்கும். உதாரணமாக,
* நீர் எனும் பூதம் அதிகமானால் நெருப்பு எனும் பூதம் குறைவுபடும். (நீர் நெருப்பை அணைக்கும்.) நீர் எனும் பூதம் குறைவாகும்போது நெருப்பு அதிகமாகும்.
* நெருப்பு எனும் பூதம் அதிகமானால் நிலம் எனும் பூதம் குறைவுபட்டால் அல்லது அதிகமானால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பன போன்ற பல செய்திகளை நமது ஆயுர்வேத, சித்த மருத்துவ நூல்கள் மிக விரிவாகக் கூறுகின்றன. சீன மருத்துவ நூல்களிலும்கூட பஞ்சபூதத் தத்துவம் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நோய்கள் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோய்களைக் குணப்படுத்தவும் பஞ்ச பூதங்களை சமன் செய்வது மிக மிக அவசியமாக உள்ளது. .
பஞ்சபூதங்களும் முத்திரைகளும் பற்றி நாளை பார்ப்போம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home