மூலிகைகளின் முறிவு விதி
மூலிகைகளின் முறிவு விதி
உலகில் இருபது லட்சம் மூலிகைகள் உள்ளன. ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு குணம் உண்டு. ஒரு மூலிகையை மருந்துக்கு உட்கொள்ளும் பொழுது , ஒரு சில மூலிகைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பக்க விளைவுகளைத் தரும் மூலிகைகளுக்கு முறிவு உண்டா?
ஒவ்வொரு மூலிகையும் , உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கு ஒவ்வொரு விதத்தில் உதவுகின்றன. அப்படி உதவும் மூலிகைகள் ஒரு சில காரணங்களால் பக்க விளைவைத் தரும். அப்படிப்பட்ட மூலிகைகளுக்கு முறிவு மருந்தைக் கொடுக்கலாம். இது பற்றி விரிவாகக் பின்வருமாறு. அறுபத்து நான்கு வகையான பாஷாணங்களுக்கும் முறிவு உண்டு.
அறுபத்து நான்கு வகையான பாசாணங்களுக்கும் முறிவு
மிளகு இரண்டு பங்கு, பருத்திக் காய் , வண்ணான் அவுரிவேர், சிறு கீரை வேர், இவைகளை ஒவ்வொரு பங்காக எடுத்து இடித்து , பொடி செய்து கொதிக்க வைத்து காலை மாலை இரு வேளையும் அரைக்கால்படி வீதம் கொடுத்து வரவும்.
அதிக சோர்வாய் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கவும்.
64 வகை பாஷாண வகைகளுக்கும் முறிவு நீலி என்ற வண்ணான் அவுரி ஆகும்.
எந்த ஒரு உணவையும் அளவுக்கு மீறி சாப்பிட்டு, உடலில் ஏற்றுக் கொள்ளாமல் விஷமாக மாறினால் அதற்கு முறவு முருங்கை மரப் பட்டை திரியடிபிரமாணம், ஆவாரம் வேரின் பட்டை திரியடிபிரமாணம், சிறிய வெங்காயம் ஒரு பல் மூன்றையும் சேர்த்து இடித்து காயவைத்து காலையிலும், மாலையிலும் தேனில் கலந்து ஐந்து நாட்கள் சாப்பிட்டு வர விஷம் முறியும்.
அபின் மற்றும் ஊமத்தங்காய் தின்றவர்களுக்கு நிவர்த்தி
மாசிக்காய் கியாழம் கொடுக்க நிவர்த்தியாகும். (கியாழம் என்பது காயவைத்து இடித்து பொடி செய்தல்)
(அல்லது)
மிளகு, சீரகம், கொத்துமல்லி (தனியா) சோம்பு இவைகளை சமன் எடுத்து இடித்து திரியடிப்பிரமாணம் கொடுக்கவும்.
தனி ஊமத்தை சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி
தாமரைக் கிழங்கை புளித்த தண்ணீர் என்ற காடியில் அரைத்துக் கொடுக்கவும்.
(அல்லது)
கோவை இலையை அரைத்து ஒரு சங்கு அளவு கொடுக்க உடன் நிவர்த்தியாகும்.
எருக்கன் பால் அருந்தியவர்களுக்கு நிவர்த்தி
பசு மோர் , நெய், கருவேலன் கியாழம் (அல்லது) அவுரி, நீர் ஆகாரம் என்ற காடித்தண்ணீர், சர்க்கரை , முத்தெண்ணெய் , மஞ்சள் இவை கொடுக்கவும்.
சுண்ணாம்பு சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி
மஞ்சள்கியாழம் , எள்ளெண்ணை , எருமைத் தயிர், சீந்தில்கொடிகியாழம், சீரகம் , கொள்ளக்காய் வேளை கியாழம் இவைகளில் எது வேனும் ஒன்று கொடுக்கவும்.
புகையிலை சாப்பிட்டவர்களுக்கு நிவர்த்தி
அகத்திக்கீரை சாறு ஒரு கங்கு கொடுக்கவும்.
தில்லைப் பால் அருந்தியவர்களுக்கு நிவர்த்தி
எருமைக் கோமியம், கோவை சாறு ,விளக்கெண்னை கொடுக்கவும்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home