Monday, 7 March 2016

நாள்பட்ட நோய்களுக்கு முத்தரை சிகிச்சை

நாள்பட்ட நோய்கள்

* நீரிழிவு நோய்
* உயர் ரத்த அழுத்தம்
* வயிற்றுப்புண்
* பக்க வாதம்
* மூட்டு வலிகள், முதுகு வலி
* ஆஸ்துமா
* சைனஸ் நோய்
* அலர்ஜிகள்
* மனஇறுக்கம்
* மைகிரேன் தலைவலி
* போதைப் பழக்கங்கள்
போன்றவையே இந்தியர்களைத் தாக்கும்  நாள்பட்ட நோய்களில் மிக முக்கியமானவை எனக் கூறலாம். இந்த நோய்களை முத்திரைப் பயிற்சிகளின் மூலம் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைக் காண்போமா?

         நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை

       மேலே பட்டியவிட்ட நோய்கள் பெரும்பாலும் பல வருடங்களாக உள்ள தவறான உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் , சுவாச முறைகள், உணர்வு நிலைகள் ஆகியவற்றாலேயே உருவாகி இருக்கும். இவற்றை ஒரே நாளில் சரி செய்துவிட முடியாது. தொடர்ந்து முத்திரைப் பயிற்சிகளால் படிப்படியாகவே குறைக்கமுடியும். இதில் பல நிலைகள் உள்ளன.
1. உடலில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றுதல்,
2. பஞ்சபூதங்களை சமநிலைப் படுத்துதல்.
3. தச வாயுக்களின் இயக்கங்களை சரிசெய்தல்.
4. மலச்சிக்கலை அகற்றுதல்.
5. அமைதியான மனநிலையை உருவாக்குதல் .
6. நோய்க்கான முத்திரைகளைத் தொடர்ந்து செய்தல்.
இந்த வரிசைப்படி படிப்படியாகப் பயிற்சிகளை மேற்கொண்டால்  மட்டுமே நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முடியும். அந்தந்த நோய்க்கான முத்திரைகளை மட்டுமே செய்வதால்  தற்காலிகப் பலன் கிடைக்குமே தவிர, நிரந்தரமான பலன் இராது. எனவே நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் பொறுமையாக - படிப்படியாக முத்திரை சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

                          நிலை - 1
       உடலில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றுதல்

       நமது உடலில் பல வருடங்களாகத் தேங்கி நிற்கும் கழிவுகளும் நச்சுப் பொருட்களுமே பல நாள்பட்ட நோய்களுக்கு மூலகாரணமாக அமைகிறது என்பதை ஏற்கெனவே கண்டோம். அவற்றை முதலில் அகற்றி உடலைத் தூய்மைப்படுத்துவதே சிகிச்சையின் முதல் நிலையாகும்.  இதற்கான முத்திரை தாய்மைப்படுத்தும் முத்திரை (Detoxification mudra).
        இந்த முத்திரையைச் செய்வது எப்படி என்பதை ஏற்கெனவே கண்டோம்.
        சிகிச்சையை ஒரு அமாவாசை நாளில் துவங்குவது நல்லது. பலன்கள் விரைவாகவும் முழுமையாகவும் கிடைக்கும். தொடர்ந்து 14 நாட்கள் இந்த முத்திரையை (தினமும் இருபது நிமிடங்கள்) செய்யவும். உடலிலுள்ள கழிவுப் பொருட்களும் நச்சுப் பொருட்களும் வெளியேறி உடல் தூய்மையடையும் 14 நாட்களுக்குப் பின் அடுத்த நிலைக்குச்  செல்லுங்கள்.

                           நிலை - 2
        பஞ்சபூதங்களை சமன்படுத்துதல்
   
       உடலில் நீர் , நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே பல நோய்களுக்கும்  அடிப்படைக் காரணம் என்பதையும் , அதை சமன்படுத்தும் பஞ்சபூத முத்திரைகளையும் ஏற்கெனவே கணடோம் அல்லவா?
       உங்களது உடலில் எந்த பூதம் குறைபட்டுள்ளது அல்லது மிகுந்துள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கான முத்திரையைச் செய்து சமன் செய்யவும்.
        தொடர்ந்து 14 நாட்கள் இந்த பஞ்சபூத முத்திரையைச் செய்யவும்.

                         நிலை - 3
        பிராண முத்திரை , அபான முத்திரை, சமான வாயு முத்திரை என தசவாயுக்களின் இயக்கங்களை சீர் செய்யும் மூன்று முத்திரைகளை ஏற்கெனவே கண்டோம்.  அவற்றின் துணையோடு தசவாயுக்களை சீர் செய்யுங்கள்.
   பிராண முத்திரை - 7 நாட்கள்.
    அபான முத்திரை - 7 நாட்கள்
     சமான வாயு முத்திரை - 7 நாட்கள்.

                            நிலை - 4
      மலச்சிக்கலை அகற்றுதல்
   
       தொடர்ந்த மலச்சிக்கலும் பல நோய்களுக்கு அடிகோலும். தூய்மைப்படுத்தும்  முத்திரையைச் செய்வதன் மூலமே பலருக்கு அது சரியாகிவிடும். அப்படியும் சரியாகாதவர்கள்  சூஜி முத்திரை முஷ்டி முத்திரை ஆகிய முத்திரைகளில் ஏதாவது ஒன்றைச் செய்வதன் மூலம் அதே சரி செய்து கொள்ளலாம்.- சூஜி முத்திரையைச் செய்வது எப்படி என்பதை காணலாம்.

                          நிலை - 5
     அமைதியான மனநிலையை உருவாக்குதல்

        மனமும், எண்ணங்களும் சீராகும்போது நாள்பட்ட நோய்களின் தீவிரம் கணிசமாகக் குறைந்து போகும். 'ஞான முத்திரை' என்றழைக்கப்படும் 'சின் ' முத்திரை' யைத் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இதை சாதிக்க முடியும்.

                           நிலை - 6
       நோய்களுக்கான தனிப்பட்ட முத்திரைகள்

         இதுவரையில் நிலை 1 முதல் 5 வரையில் கூறப்பட்டுள்ள முத்திரைகள் நாற்பட்ட நோய்களால் அவதிப்படும் அனைவருமே செய்ய வேண்டிய பொதுவான முத்திரைகளாகும். இவற்றைச் செய்து உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, சமநிலைப்படுத்திய பின்னரே ஒவ்வொரு நோய்க்கான தனிப்பட்ட முத்திரைகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே முழுமையான பலனை எதிர்பார்க்க முடியும்.

முத்திரைகளும் - நாட்களும்

                            நிலை - 1
        தூய்மைப்படுத்து முத்திரை - 14 நாட்கள்.

                            நிலை - 2
       பஞ்சபூத முத்திரை - 14 நாட்கள்.

                            நிலை - 3
        தசவாயுக்களை சரிசெய்தல்.
பிராண முத்திரை - 7 நாட்கள்.
அபான முத்திரை - 7 நாட்கள்.
சமான வாயு முத்திரை - 7 நாட்கள்.

                           நிலை - 4
         மலச்சிக்கலை அகற்றுதல்.
சூஜி முத்திரை / முஷ்டி முத்திரை - மலச்சிக்கல் மறையும் வரை
 
                         நிலை - 5
        மனதை அமைதிப்படுத்துதல்.
     ஞான முத்திரை - தினமும் இரவில் படுக்கச் செல்லும் முன் தொடர்ந்து செய்யலாம் .

                         நிலை - 6
        நோய்களுக்கான தனிப்பட்ட முத்திரைகள் - நோய் மறையும் வரை .

                      குறிப்பு :

     நிலை - 3 (தகவயுக்களை சமன்படுத்தும்) முத்திரைகளைத் துவங்கும் போதே மலச்சிக்கலை அகற்றும் முத்திரையையும், மனதை அமைதிப்படுத்தும் முத்திரையையும் செய்யத் துவங்கி விடலாம்.

         

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home