முத்திரைப் பயிற்சியைத் துவங்கும் முன்
முத்திரைப் பயிற்சியைத் துவங்கும் முன்
நீங்கள் முத்திரை பயிற்சி துவங்கும் முன்னர் சில அடிப்படையான கருத்துகள் மனதில் கொள்வது அவசியம்.
1. இடம்
நீங்கள் முத்திரைப் பயிற்சிகளை செய்யும் இடம் நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ளதாக இருப்பது நல்லது. அமரும் தரை (தளம்) மேடு, பள்ளஙகள் இன்றி சீராக இருப்பது அவசியம்.
2. நேரம்
காலையில் எழுந்து காலைத் கடன்களை முடித்து விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவிட்டு முத்திரை களைச் செய்யலாம் . ஒரு நாளில் மூன்று முறை செய்யும்போது காலை, மாலை, இரவு என மூன்று முறை செய்யுங்கள். உணவு அருந்திய உடனே முத்திரை பயிற்சிகளைச் செய்வது கூடாது. உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழிந்த பின் செய்வது நல்லது.
3. எந்த நிலையில் (posture) செய்வது!
சில முத்திரைகளை நின்று கொண்டு செய்ய வேண்டும். சில முத்திரைகளை குறிப்பிட்ட யோகாசன நிலையில் அமர்ந்து செய்யும்போது முழுமையான பலன் கிடைக்கும். எந்த நிலையில் செய்வது என்பதை அந்தந்த முத்திரைகளைப் பற்றி காணும் போது குறிப்பிடுவோம். அதைப்பின்பற்றுங்கள்.
அந்த குறிப்பிட்ட நிலையில் இருந்து செய்ய முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம் . கால்கள் தரையில் பதிந்திருக்க வேண்டும். கழுத்தும் , முதுகும் நேராக இருப்பது அவசியம். நோயாளிகள் படுத்துக் கொண்டும் செய்யலாம்.
4. சுவாசம்
முத்திரைகளைச் செய்யும் போது சீராக, ஆழ்ந்து சுவாசிப்பது அவசியம். கஷ்டப்பட்டு இழுத்து இழுத்து சுவாசிக்க வேண்டாம். நிதானமான சீரான, இயல்பான சுவாசம் போதும். சுவாசத்தை அடக்க வேண்டியதில்லை. (Retention) வேண்டாம். இயல்பாக மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து வெளியே விடுங்கள்.
5. சிந்தனை மனம்
முத்திரைப் பயிற்சியின் போது உங்களது மனமும், சிந்தனைகளும் ஒருமுகப்பட்டு, முழு கவனமும் நீங்கள் செய்யும் முத்திரையின் மீது இருப்பது அவசியம். அவ்வாறு இருக்கும் போதுதான் முழு பலனை எதிர்பார்க்க முடியும்.
6. கால வரையறை
ஒவ்வொரு முத்திரையையும் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கணக்கு உள்ளது. ஒவ்வொரு முத்திரைகளிலும் அந்த குறிப்பு தரப்படும். அதை பின்பற்றுங்கள். சில முத்திரைகளை சில நிமிடங்களே செய்தால் போதும்.
பெரும்பாலான முத்திரைகளை 45 முதல் 48 நிமிடங்கள் செய்ய வேண்டியதிருக்கும். ஒரே நேரத்தில் செய்ய முடியாதவர்கள் 15 அல்லது 16 நிமிடங்கள் வீதம் ஒரு நாளில் மூன்று முறை செய்யலாம் .
ஆரம்ப கட்டத்தில் எட்டு நிமிடங்கள் மட்டும் செய்யவும். பின்னர் படிப்படியாக இந்த நேரத்தை 45 நிமிடங்களாக அதிகரியுங்கள்.
குறிப்பு
முத்திரைகள் மிக எளிய தந்திர வழிகள். இவற்றை எங்கே வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் செய்யலாம் . தவறில்லை. ஆனால் தொடர்ந்து 45 நிமிடங்கள் செய்யும்போது குறிப்பிட்ட நேரத்தில், நிலையில் செய்யவும் உடனடி நிவாரணத்திற்காகச் செய்யும் போது எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் 5 முதல் 8 நிமிடங்களுக்கு மேல் வேண்டாம்.
மனதையும் தூய்மைப்படுத்தும்
இதை முத்திரை ஆரம்ப நிலைகளில் உடலிலுள்ள அழுக்குகளை வெளியேற்றும். தொடர்ந்து செய்து விரும் போது மனதிலும், எண்ணங்களிலும் தேங்கியிருக்கும். மாசுகளும், அழுக்குகளும் படிப்படியாக குறைந்து , மனமும், சிந்தனையும் தூய்மையடையும். மனமும், சிந்தனையும், உணர்வுகளும் ஒரு மேலான நிலையை அடையும்.
மனதில் தேங்கியிருக்கும் வெறுப்பு, கோபம், பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை சிந்தனைகள் படிப்படியாகக் குறைந்து சந்தோஷமான ஒரு மனநிலை உருவாகும் எதிர்மறை எண்ணங்களால் உருவான நோய்களும் மறையும்.
போதைப் பொருட்கள்
போதைப் பொருட்களுக்கு, அடிமையாகி விடுபட முடியாமல் தவிப்பவர்கள் இந்த முத்திரையை கட்டாயமாகச் செய்ய வேண்டும். போதைப் பொருட்களை தொடர்ந்து உபயோகிக்கும் போது அந்த பொருட்களிலுள்ள நச்சுப் பொருட்கள் உடலில் தங்கி போய்விடுகின்றன. அவையே பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது.
போதைப் பழக்கத்திலிருந்து ஒருவரை மீட்க செய்யப்படும் சிகிச்சைகளின் போது இந்த முத்திரையையும் தொடர்ந்து செய்து வந்தால் பலன் மிக அதிகமாக இருக்கும். அந்த பழக்ககளிலிருந்து வெளி வருவதும் சுலபமாக இருக்கும்.
தொடர்ந்து இந்த முத்திரையை செய்யும்போது மனமும் , சிந்தனைகளும் தூய்மையடைவதால் மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவை மறையும். படிப்படியாக போதை பழக்கங்களிலிருந்து விடுதலை பெற்றுவிடலாம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home