தவறான வாழ்க்கை முறைகள்
தவறான வாழ்க்கை முறைகள்
காலையில் எழுவது முதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரையில், எந்தெந்த நேரத்தில் எதை எதைச் செய்ய வேண்டும். என்பதையும் நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். நமது வேதங்கள், ஆகமங்கள், உபநிடதங்கள், யோக நூல்கள், சித்தர் பாடல்கள் அனைத்திலும் இந்த சரியான வாழ்க்கை முறைகளும் நெறிகளும் விரிவாக விரிக்கப்பட்டுள்ளன.
இந்த வழிமுறைகளையும் நெறிகளையும் சரியாகப் பின்பற்றி நடந்தாலே, நோய்கள் வராது! ஆனால் இவற்றைக் குறித்த அறிவோ, தெளிவோ இன்று நம்மிடையே இல்லை என்பதே மிக வருத்தமான ஒரு உண்மையாகும்.
ஒவ்வொருவம் பிறந்த ராசி , நட்சத்திரம், கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில்கூட உண்ண வேண்டிய உணவும், கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள் ஆகியவற்றையும் நம் முன்னோர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home