சளி வருவதற்கான காரணம் , நிரந்தர தீர்வுக்கு மருந்து , என்ன உணவு சாப்பிட வேண்டும் :
சளி நோய்
மனிதன் சளியிக்கு ஆங்கிலமருந்தை எடுத்து கொள்வதே காரணம். மனிதன் பிறந்ததில் இருந்து 32 வயது வரை பித்த நாடி ஓடும். 32 வயதை தாண்டி விட்டால் பின் 36 வருடத்திற்கு சிலோத்தும நாடி ஓடும். அதற்கு கப நாடி என்றும் பெயர். 36 வருடத்திற்கு சிலோத்தும நாடி ஓடும்போது அக்காலத்தில் அளந்து ஊற்றினால் 16 படி சளி ஊறும். சளியை காரி துப்பாமல் உடலிலே வைத்துக் கொண்டால் எமனின் பாசக்கயிறுக்கு விரைவில் இரையாகிவிடுவோம்.
சளி தீர்வதற்கு நிவர்த்தி
கடுக்காய் 100 கிராம், திப்பிலி 100 கிராம், சித்தரத்தை 100 கிராம், சாதிக்காய் 75 கிராம், வால்மிளகு 200 கிராம் போன்ற ஐந்தையும் இளம் வறுப்பாக வறுத்து இடித்து கடுக்காயில் கொட்டையை நீக்கி இடித்து திரியடி பிரமானம் தேனில் காலையும், மாலையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர சளி, ஆஸ்துமா, கபநோய் போன்ற அனைத்து நோய்களும் தீரும். அதே போல் கருங்கொடுளி இலை, சிறு கீரை, சமூலமும், சம அளவு எடுத்துக் கொண்டு நன்றாக காயவைத்து இடித்து திரியடி பிரமாணம் தேனில் காலையும், மாலையும் சாப்பிட ஆஸ்துமா நோய் தீரும்.
எப்பொழுதும் அன்றாட வாழ்க்கையில் உணவாக சாப்பிடும் முறை
அரைகிலோ அளவு பச்சரிசியை ஊறவைத்து, ஒரு கைப்பிடி அளவு தூதுவளை இலை, ஒரு கைப்பிடி அளவு கண்டங்கத்திரி இலை, ஒரு கைப்பிடி அளவு ஆடாதொடை இலை, ஒரு கைப்பிடி அளவு துளசி, கல்யாண முருங்கை என்னும் முள் முருங்கை ஒரு கைப்பிடி அளவு, மிளகு 15 எண்ணம் அளவு, சீரகம் 5 கிராம் அளவு எடுத்து அனைத்தையும் அரிசியுடன் சேர்த்து நன்றாக தோசை செய்து சாப்பிட்டால் சளி நோய்அண்டாது. இதனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

3 Comments:
திரியடி பிரமானம் என்றால் என்ன மேடம்....
திரியடி பிரமாணம் என்றால் என்ன அளவு?
திரியடி பிரமாணம் என்றால், நம்முடைய கட்டை விரல்,ஆள் காட்டி விரல் மற்றும் நடு விரல் ஆகிய மூன்று விரல்களால் எடுக்க கூடிய அளவு.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home