Wednesday, 9 March 2016

நாள்பட்ட நோய்களுக்கான முதல் முத்திரை பலன்கள், எப்படி வேலை செய்கிறது?

                        பலன்கள்

   * வெகு நாட்களாக உடலில் தேங்கியிருக்கும் கழிவு பொருட்களும், நச்சுப் பொருட்களும் சிறிது சிறிதாக உடலை விட்டு வெளியேறும்.

      * உடல் தூய்மையடையும், புத்துணர்ச்சி பெறும்.

     * நோய்கள் அகலும்.

      * உடலில் தேங்கியிருக்கும் அழுக்குகள் மட்டுமின்றி மனதில் இருக்கும் அழுக்குகளும் மறையும்

           எப்படி வேலை செய்கிறது?

       நமது ஐந்து விரல்களும் ஒவ்வொரு பஞ்ச பூத்தது. தொடர்பு கொண்டுள்ளன. பஞ்ச பூதங்களின் இயக்கங்களை, அளவை நமது விரல்கள் மூலமே சமன் செய் முடியும். இது குறித்து பின்னர் விரிவாகக் காணலாம்.

    பெருவிரல் (நெருப்பு ) எனும் பூதத்தையும், மோதிர விரல் (நிலம்) எனும் பூதத்தையும் ஆளுகிறது.

      நிலம் எனும் பூதம் நமது பருஉடலைக் குறிப்பதாகும்.

       மோதிர விரலோடு (பரு உடல்), பெருவிரலை (நெருப்பு ) இணைக்கும்போது பருஉடலில் தங்கியுள்ள கழிவுகளும், நஞ்சுகளும் நெருப்பு எனும் பூதத்தால் அழிக்கப்பட்டு வெளியேறுகின்றன.

       நாம் ஏற்கெனவே கண்டபடி நமது உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் சிறுநீர், மலம், வியர்வை போன்றவற்றின் வழியே தான் வெளியேறும். சில பொருட்கள் சுவாசத்தின் மூலமாகவும் வெளியேறுவதுண்டு. இந்த தூய்மைப்படுத்தும் முத்திரையைக் செய்யும் போது நச்சுப் பொருட்களும், அதிக அளவில் வெளியேறுவதால் கீழ்கண்டவை நிகழலாம்.

     * சிறுநீரின் அளவு அதிகரிக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் அவசியம் ஏற்படலாம். சிறுநீரின் வீச்சமும் அதிகமாக இருக்கும்.

     * இரண்டு அல்லது 3-வது நாளிலிருந்து சிலகுக்கு லேசான பேதியும் இருக்கும்.  சிலருக்கு மலத்தின் நிறம் கறுப்பாக மாறும்.

     * உமிழ் நீரின் அளவு அதிகரிக்கும். சிலருக்கு வாயில் கசப்பு அல்லது உலோகச் சுவை தோன்றலாம்.

      * வியர்வையின் அளவு அதிகரிக்கலாம். அதன் உப்பு தன்மையும், வாசமும் கூட அதிகரிக்கலாம்.

      இவை அனைத்துமே நச்சுப் பொருட்கள் வெளியேறுவதற்காக அடையாளங்களே. எனவே அச்சம் கொள்ளத் தேவையில்லை. உடலில் தேங்கியிருக்கு நச்சுப் பொருட்களின் அளவை பொறுத்து 3 முதல் 7 நாட்கள் வரையில் இவை இருக்கும். பின்னர் படிப்படியாகக் குறைந்து 10 முதல் 15  நாட்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

      முத்திரைப் பயிற்சிகளைத் துவங்குபவர்கள் செய்ய வேண்டிய முதல் முத்திரை இதுதான். 7 முதல் 10 நாட்கள் வரை இந்த முத்திரையைக் செய்து உடலைத் தூய்மையாக்கிய பின்னர் பிற முத்திரைகளைச் செய்யத்தகுந்தது.

       பல வருடங்களாக உடலில் தேங்கி நிற்கும் கழிவுகளை அகற்றி விட்டாலும் கூட மீண்டும் படிப்படியாக கழிவுகள் சேரத் துவங்கும் . எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை (3 முதல் 7 நாட்கள் இந்த முத்திரையை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தால் நோய் நொடிகள் அணுகாது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home