உடம்பே ! ஆலயம் உள்ளமே இறைவன் ! : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
நமது உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளது என்று சில நூல்கள் கூறுகிறது.
நம் உடம்பில் 10 ஆதாரங்கள் உள்ளது என்று பல நூல்கள் கூறுகின்றன. அந்த 10 ஆதாரங்களையும் சித்தர்களே அடையவில்லை. இந்த 10 ஆதாரங்களை அடைந்தவர்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்கள். சித்தர்கள் எட்டு ஆதாரங்கள் வரைதான் அடைந்திருக்கிறார்கள். ஆகையால் சித்தர்கள் " அஷ்டமாசித்து " என்று கூறுகிறார்கள். இந்த அஷ்டமாசித்தை அடைந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. ஆகையால் தான் அவர்களுடைய பெயர் இன்றும் பேசப்படுகின்றது. இன்னும் உலகம் இருக்கும் வரை அவர்கள் பெயர் பேசப்படும்.
இறைவன் நமக்கு ஆறு அறிவு கொடுத்துள்ளான். ஆறு சுவை கொடுத்துள்ளான். ஆறடி நிலம் கொடுத்துள்ளான். இவ்வாறு அனைத்தையும் ஆறாகவே கொடுத்துள்ளான். இதையெல்லாம் உணர்ந்த சித்தர்கள் ஆறு ஆதாரங்களை மட்டும் நமக்கு சொல்லி உள்ளார்கள். ஆகையால் தான் அனைத்து நூல்களிலும் ஆறு ஆதாரங்களுக்கு மட்டுமே வழி காட்டியுள்ளார்கள். இதில் நாங்கள் எட்டு ஆதாரங்களை பற்றி கூறியுள்ளோம். ஆனால் இந்த கலியுகத்தில் ஆறு ஆதாரங்களை அறிவதே கடினம். முதல் ஆதாரமான மூலாதாரத்தைக்கூட பல நூற்றாண்டாக யாரும் தொட்டதில்லை.
உந்தியின் மேல் உதகமண்டலம்
நாம் பல ஆலயங்களில் சென்று பூஜிப்பதைவிட, நம் உடலே ஒரு ஆலயம் என்று யோசிப்பதே நல்லது. இந்த புதிவை பார்த்த பிறகு நமது உடலே ஒரு ஆலயம் என்று நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
நமது உடலிலே தெய்வம் உள்ளது என்று சித்தர்கள் கூறியுள்ளனர். சிவவாக்கியர் எனும் சித்தர் நாதன் நம்முள்ளே இருக்கிறார் என்று கூறுகிறார். அதாவது " நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பங்சாத்தியே சுற்றி வந்து முணுமுணுவென்று சொல்லுமந்திர மேதடா ?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்ககயில்சுட்ட சட்டி வங்கறிச் சுவையறியுமோ?" என்று சிவவாக்கியர் மனிதனே ஒரு கோயில் என்று தெளிவாகக் கூறியுள்ளார். நமது உடலில் உள்ள ஆதாரங்களும் 51 இதழ்களும் படம் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இந்த 51 இதழ்கள்தான் 51 கக்தி பீடங்களாக உருவாகி உள்ளது.
சிறு வயதிலேயே நம் உடலில் தான் தெய்வம் இருக்கிறது என்பதை இந்த நூல் மூலம் நீங்கள் உணர்ந்து விட்டீர்கள். ஆதலால் நீங்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள். ஆனால் பதினொன்றாம் நூற்றாண்டில் நமது உடலே ஆலயம் என்று வயது முதிர்ந்த காலத்தில் தான் உணர்ந்ததாக பட்டினத்தாரே கூறியுள்ளார். அவர் புலம்பிய புலம்பலை நீங்களே பாருங்கள்.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home