Wednesday, 2 March 2016

எதிர்மறை சிந்தனைகளே பல புற்று நோய்களுக்கும் மன நோய்களுக்கும் காரணமாகிறது என நவீன மருத்துவ விஞ்ஞானம் கண்டுபிடித்து வருகிறது :

எதிர்மறையான சிந்தனைகள்

       கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறையான சிந்தனைகள் வயிற்றுப்புண் நோயை (Peptic Ulcer) உருவாக்கும். ரத்த அழுத்தத்தை (B.P.) அதிகமாக்கும். இதய நோய்களை உண்டு பண்ணும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். மனதில் பல ஆண்டுகளாகத்  தேக்கி வைத்திக்கும் எதிர்மறை சிந்தனைகளே பல புற்று நோய்களுக்கும் மன நோய்களுக்கும் காரணமாகிறது என நவீன மருத்துவ விஞ்ஞானம் பல ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடித்து வருகிறது.
         ஆனால் நமது முன்னோர்களின் மெய்ஞ்ஞானம்  பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கண்டுபிடித்ததோடு நில்லாமல், அதை சரி செய்யும் வழிகளையும் கூறி வைத்துள்ளது.
* பக்தி மார்க்கம்
* தியானம்
         ஆகிய இரண்டுமே அந்த வழி முறைகள்! பக்தி மார்க்கத்தில் செல்லும்போது மனம் தூய்மையடைகிறது.  எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, தூய எண்ணங்கள் மனதில் வேர் கொள்கின்றன. தியானம் ஓர் அற்புதமான வழிமுறை. தியானத்தில் தொடர்ந்து ஈடுபடும்போது மனமும் சிந்தனையும் பக்குவமடைகின்றன. இன்று ஆங்கில மருத்துவர்கள்கூட மன அழுத்தத்தை குறைக்க தியானத்தை சிபாரிசு செய்கிறார்கள்.
        நாம் ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும் பிராணவாயு எனப்படும் ஆக்சிஜனை  மட்டுமின்றி காற்றில் நிறைந்துள்ள பிரபஞ்ச சக்தியையும் (Cosmic Energy) சேர்த்தே உள்ளே இழுத்துக் கொள்கிறோம்.  இவை இரண்டுமே நமது உயிர் சக்தியை உருவாக்க மிக அவசியமானவை.
        நமது சுவாச முறை சரியாக இல்லாமல் போனால் பிராண வாயு , பிரபஞ்ச சக்தி இரண்டுமே சரியான அளவில் உடலில் சேருவதில்லை. இந்த நிலை ஏற்படும் போதுதான்  உயிர்சக்தி உற்பத்தியில் குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த உயிர்சக்திக் குறைபாடு பல நோய்கள் உருவாக மூலகாரணமாக அமைகிறது.
        சுவாசத்தை  சீர் செய்ய நம் முன்னோர்கள் கண்டறிந்த முறையே ' பிராணாயாமம் ' எனும் சுவாசப்  பயிற்சி. இந்த பிராணயாமத்தில்  பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு நபரின் உடல் நிலைக்கு ஏற்ப, குறைபாடுகளுக்கு ஏற்ப அவருக்குத் தேவையான பிராண யாம முறையை நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்தனர்.
         சுவாசம் சரியற்று இருந்தால் 'வாயு மய கோசம்' எனும் சக்தி உடலில் சக்தித் தேக்கங்கள் ஏற்பட்டு, நாளடைவில் அது நோய்கள் உருவாகக் காரணமாகிறது. சுவாசப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு  வாயு மயகோசம் வலுப்பெறும். நோய்கள் அணுகாது.
     

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home