மரங்கள் இல்லை எனில் ஆக்சிஜன் சிலிண்டரை பயன்படுத்தும் நிலைமை வந்து விடும் :இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
நம் தாத்தா , பாட்டி காலங்களில் மாதம் மும்மாரி மழை பெய்தது என்று கூறினார்கள். ஆனால் அதே வானம் தான் , அதே பூமிதான். ஏன் இப்பொழுது சரியாக மழை பெய்யவில்லை. தண்ணீர் பஞ்சம் வருகிறதே. இதற்கு ஏதேனும் காரணம் உண்டா?
ஆம் உண்டு. இதற்கு மரங்கள் தான் காரணம். உயிருள்ள மரங்கள் இல்லாததால் உயிரற்ற காற்றை சுவாசிக்கின்றோம். 70 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடி மக்கள் இருந்தனர். அப்பொழுது மக்களுக்கு அளவுக்கு மீறிய ஆக்சிஜன் காற்று மரங்கள் மூலம் கிடைத்தன. ஆனால் இப் பொழுது 103 கோடி மக்கள் இருக்கின்றனர். 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மரங்கள் கூட இப் பொழுது இல்லை. அன்று ஒருவர் சுவாசித்த காற்றை இப்பொழுது நாம் ஐந்து பேர் சுவாசித்துக் கொண்டு இருக்கின்றோம். இந்த நிலை இவ்வாறே நீடித்தால் பின்னாடி வரும் சந்ததிகள் இப்போது சமையலுக்கு எவ்வாறு கேஸ் சிலிண்டரை பயன்படுத்துகின்றோமோ அதே போல் உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் சிலிண்டரை பயன்படுத்தும் நிலைமை வந்து விடும். அந்த நிலைமை வரக்கூடாது என்பதற்காக மரக் கன்றுகளை நடுங்கள் என்று பல இடங்களில் விழிப்புணர்ச்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள். மகளிர் குழுக்களுக்கும் , வனவியல் விரிவாக்க மையம் போன்ற இடங்களில் விழிப்புணர்ச்சி செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதை நாம் செயல் முறையில் கொண்டு விர அனைத்து விதமான விழாக்கள் , விஷசேகங்கள் வீட்டில் அல்லது அலுவலகமா இருந்தாலும் அவ்விடத்தில் தேங்காய், பழங்கள் வழங்கபடும். முடிந்தவர்கள் இரண்டையும் கொடுக்கலாம் அதற்கு மாறாக மரக் கன்றுகளை மட்டுமாவது கொடுக்கலாம். தேங்காய் பழங்களை எப்படி முன் பதிவை செய்து பெற்று கொள்கிறோமெ அல்லது நேரில் சென்று வாங்குகிறோம் . அதே போல் மார்க்கன்று வளர்க்கும் இடங்களில் நாம் வாங்கி வந்து பரிசாக கொடுக்கலாம்.
குறிப்பு : ஒன்று , இரண்டு மாதங்களுக்கு முன்பு எவ்வளவு வேண்டும் என்று பதிவு செய்து அதை பெற்று பரிசாக கொடுங்கள்.
அதே போல் பழங்களின் விதைகளை குப்பையில் போட வேண்டாம். காகித பையில் எடுத்து வைத்து கொண்டு செல்லும் வழியில் காலி இடங்களில் பொட்டு விடுங்கள். மழைகாலங்களில் அவ்விதை முளைத்து மரமாகும் பிற்காலத்தில் நம் சந்ததியர்க்கு பயனிக்கும்.
மரங்கள் இல்லையேல் மண்ணில் உயிர்களேது !
தமிழ் நாட்டில் மட்டும் 6 . 1/2 கோடி மெல் மக்கள் உள்ளனர். ஒவ்வொரு வரும் ஒரு மரம் நட்டினால்கூட 6 . 1/2 கோடி மரங்கள் ஆகிவிடும் அதே போல் உலக மக்கள் அனைவரும் இதை. சிந்தித்து செயல்பட வேண்டும். இம் மரங்களை சாலை ஓரங்களில் நீங்கள் ஊன்றி வைக்காவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டிற்கு அருகிலாவது உங்களுக்கு நல்ல ஆக்சிஜன் காற்று கிடைக்கும்படி ஊன்றி வைக்கலாம்.
இவ்வாறு மரங்களை நட்டு வளர்த்து விட்டால் நம் தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே இருக்காது. பின் வரும் சந்ததிகள் நல்ல ஆக்சிஜன் காற்றை சுவாசித்து நோயில்லாமல் வாழ்வார்கள். இந்த நாடும் வல்லரசு ஆகும்.
" அரை நூற்றாண்டு மரம் ஐம்பது இலட்சத்திற்கு சமம்"
50 ஆண்டு மரத்தின் பலன் நாளை பார்ப்போம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home