Wednesday, 3 February 2016

கருவறை அதன் பொருள் மற்றும் விநாயகர் சுழி – ஒரு விளக்கம் : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

விநாயகர் சுழியாக ' உ' போடுவதின் ரகசியம் என்ன? அதைப் பற்றி வரிவாக பார்ப்போம்.

   தாயின் கருவறையில் பத்து மாதங்கள் வரை தங்கியிருந்து நன்கு வளர்ச்சி அடைந்தபின் கருவறையில் இருந்து வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை சிசுவானது தமது இருகரங்களையும் தனது நாசிக்கு நேராக வைத்து கூப்பி வணங்கி தியானத்தில் ஆழ்ந்து இருக்கும். அந்த சிசுவானது இறைவனிடம், ' இறைவா ! நீயே கதி ! என்று கருவறையில் தியானித்துக் கொண்டு இருக்கிறேன். நீ எனக்கு என்ன வரம் கொடுக்கப் போகிறாய்? ' எனக் கேட்கும். அதற்கு இறைவன், மும்மூர்த்தியின் கங்கையில் மூன்றரை லிட்டர் நீரில் அமர்ந்து கொண்டிக்கிறாய் ! இன்னும் சில நாட்களில் வெளியில் செல்லப் போகிறாய். உன் தாயின் அபான வாசலின் வழியே நீ செல்லும் போழுது விநாயகருக்கு உரிய மந்திரத்தை எந்த அளவுக்கு உச்சரிக்கின்றாயோ, இந்த அளவுக்கு நீ வாழ்வாயாக ! என்று இறைவன் வரம் கொடுக்கின்றார். ஆகையால் அந்த சிசு தாயின் அபான வழியான முதல் வாசல் வழியாக வருவதால் அந்த வாசலின் பெயர் உகரம். ஆதலால் அந்த சிசு முதன் முதலில் " உ அ, உ அ " என்று அழுகின்றது. ஆகவே நாம் எந்த ஒரு விசயத்தை எழுதும் பொழுதும் முதலில் 'உ ' போடுகின்றோம். இதுவே ' உ ' போடும் ரகசியம். இதை 108 முறை உச்சரித்தால் அக்குழந்தை 120 வயது வரை தீர்க்காயுசுடன் வாழும். அக் இழந்தை இம் மந்திரத்தை குறைத்து உச்சரிக்க உச்சரிக்க, அதன் ஆயுளும் குறையும். இதனால் தான் பிறந்த இழந்தை அழுகவில்லை எனில் கிள்ளிவிட்டோ, அல்லது சுண்டிவிட்டோ, அழவைப்பார்கள். ஆகையால் அந்த சிசு இந்த உலகத்தைப் பற்றி அறிவதற்கு முன்பே அதன் வாயில் இருந்து வரக்கூடிய எழுத்து ' உ ' அடுத்து வரக்கூடிய எழுத்து 'அ ' மூன்றாவதாக வரக்கூடிய எழுத்து 'ம' . இந்த "உகரம், அகரம், மகரம் " இம் மூன்றும் சேர்ந்துதான் 'பிரணவம் ' இந்த பிரணவம்தான் "ஓம்" எனும் நாதம்.

           இந்த "ஒம் " என்ற நாதத்தை அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் நம்மை அறியாமலேயே சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். அது எவ்வாறு என்றால்,
 
வணங்கு" வோம்" ( ஓம் )

படிப் "போம்" (ஓம்)

அமைப் "போம்" (ஓம்)

செல் "போம்" (ஓம்)

கொடுப்  "போம்" (ஓம்)

மந்திரம் ஜெபிப் "போம்" (ஓம்)

பேசு " வோம்" (ஓம்)

வாழ்த்து " வோம்" (ஓம்)

ஆனகயால் தான் " ஓம் " என்பது என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் நாதமாகி உணரப்படுகிறது.

விநாயகர் சுழி வந்த விபரம் முற்றிற்று

வீட்டைச் சுற்றியுள்ள மூலிகைகளின் மருத்துவ குணங்களைப் பற்றியும், ஆன்மீகத்தைப் பற்றியும், ஒழுக்க நெறி முறைகளை பற்றியும் , காலை முதல் இரவு வரை தூங்கும் வரை உள்ள விசயங்களைப் பற்றி கொஞ்சம் தெளிவாக பதிவுகள் வந்து கொண்டெ இருக்கும்.

            நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை. ஏனென்றால் நோயில் மக்கள் அவ்வளவு அவதிப்படுகிறார். ஆகையால் உங்களிடம் இதைப்பற்றி விரிவாக சொல்ல விரும்புகிறேன்.

இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.

இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.

தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

                           * * * * * * *

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home