முசுமுசுக்கை அதன் மருத்துவ குணங்களும் :இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
இம் மூலிகையின் பெயர் " முசு முசுக்கை ". சித்தர்கள் இதனை " இரு குரங்கின் கை " என்று அழைத்தனர். பித்தம் அதிகமானால் , இம் மூலிகையைப் பறித்து லேசாக இடித்து ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட குணமாகும். தலை சுற்றல் இம் மூலிகையை பறித்து இடித்து காடியல் ( புளித்த நீர்) வதக்கி தலையில் வைத்து கட்டி நித்திரை செய்ய நோய்கள் தீரும்.
இதன் இலை , காசம் , கோழை, சுவாசம் , நெஞ்சில் புகைக் கம்மல் , ஜலதோஷம் , ஆகியவை நீங்கும். முசு முசுக்கை வேரினால் துர்க் கந்தத்துடன் குறுகிய கோழை , சாதாரண விஷம் , விஷால சக ரோகம் , மார்பு நோய் , பக்க வாதம் , பித்தாதிக்கம் , இவைகள் போகும். பித்தம் தணியும் , மூளை பலம் பெறும். இம்மூலிகையில் " சுண்ணாம்பு சத்து , செம்புச்சத்து , தாமிரச்சத்து " அதிகம் உள்ளது.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home