வாழைமரம் அதன் மருத்துவ குணங்களும் :இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.
இம் மூலிகையின் பெயர் " வாழைமரம் " வாழை மரத்தை அதன் அடிப்பகுதி வரை வெட்டி விட்டு , பின் படத்தில் காட்டியுள்ளவாறு மரத்தின் அடிப் பகுதியில் உள்ள தண்டில் குழி போல் வெட்டி எடுத்து விட வேண்டும். பின் அதனை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பார்த்தால் குழியில் நீர் ஊறி இருக்கும் . அந்த நீரை மட்டும் தனியே எடுத்து காலையிலும் மாலையிலும் அரை தம்ளர் அளவு நான்கு நாட்கள் வரை சாப்பிட்டு வர பெண்களுக்கு தூவாழையாக போவது குணமாகும்.
மேலும் வயிற்றுப் புண், சூடு மற்றும் கல் அடைப்பு போன்ற நோய்களும் குணமாகும். வாழைக் கிழங்கில் ஊறுகின்ற நீரானது , பெரு வயிறு இரத்தக் கிரிசாரம், எரி மூத்திரம் , அற்பவிரணம் , சோமரோகம் , அயர்வு உழலை நோய், பாண்டு , எலும்புருக்கி ஆகியவைகளை நீக்கும். தேகத்திற்கு வன்மையை உண்டாக்கும்.
இதன் சமூலம் , குடலில் சிக்கிய ரோமம் , தோல் விஷம் , இவைகளை நீக்கும். தண்டில் கால்சியம் , பாஸ்பரஸ் , இரும்புச் சத்து, வைட்டமின் பி, சி ஆகிமாக உள்ளது. பூ விரமேகத்தை நீக்கும். பூவில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. இதன் பிஞ்சு மூலக் கருப்பை நீக்கும். இதன் காய் உடல் முழுவதும் வாயுவை உண்டாக்கும். வாழைப் பிஞ்சுக்கு இரத்தக் கடுப்பு, உள் வலய இரத்த மூலம் அதி மூத்திரம் , வயிற்று விரணம் இவைகள் போகும். பிரமேகம் , வெள்ளை , பைத்தியம் , பாதிக்கம் , உதிரக் கடுப்பு, இருமல் கை கால் எரிச்சல் இவைகள் நீங்கும். சுக்கில விருத்தி உண்டாக்கும்.
வாழைக் காயினால் , பித்த வாந்தி , பைத்தியம் , பித்தாதிக்கம் , காய்ச்சல் , வயிற்று இரைச்சல் , உஷ்ணம் , இருமல் இவைகள் போகும். இரத்த விருத்தியும் பலமும் உண்டாகும். போஜனம் அதிகரிக்கும். சோம ரோகம் , பித்த பிணிகள் மாத நோய் , மயக்கம் ஆகியவைகள் போகும்.
வாழைக் காயில் ஃபோலிக் அமிலம் , இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. வாழை இலையில் சரும தாதுவில் பளபளப்பும், சுக போகங்களும் பொருந்தும். மந்தாக்கினி , துர்பலம் , க்ஷிணவாதம் , சிலேஷ்ம அரேசகம் இவைகள் நீங்கும். பித்த கோபம் சாந்தமாகும். வாழை பழத்தில் கார் போஹைட்ரேட் இரும்புச் சத்து கால்சியம் வைட்டமின் ஏ, பி, சி அதிகமாக உள்ளது. இது காயகல்பத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை. இம் மூலிகையில் " செம்புச்சத்து, உப்புச் சத்து " அதிகம் உள்ளது.
இந்த தகவல் அனைத்தும் ஏட்டில் இருந்து எடுக்கபட்டவை.
இதை போன்ற பதிவுகள் தொடர்ச்சியாக ... அடுத்த இணைப்பில் வரும்.
தொடர்ந்து பாருங்கள் , இந்த இணைப்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் சிறப்பாக வாழ...
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.
* * * * * * *

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home