Thursday, 28 January 2016

50 ஆண்டு வாழ்ந்தால் மரத்தின் பலன் : இந்த பதிவை பகிருங்கள் பலருக்கு பயனளிக்கும்.

பிராண வாயு உற்பத்தி – 2.5

காற்று மண்டலத்தை சுத்திகரித்தல்  –  5.0

ஈரப்பதத்தை காத்தல்  –  3.0

மண் வளத்தை காத்தல்  – 2.5

விலங்கு பறவைகளுக்கு புகலிடம்  –  2.5

தாவர உரம்   – 0.2

பூ , காய் , கனிகளின் மதிப்பு – 0.5

         ஒருவர் இறந்த பிறகு அவர்களுக்கு கல்லறை கட்டுவதற்கு பதிலாக அவர்களை புதைத்த இடத்தில் அவர்கள் நினைவாக ஒரு மரத்தை நடுங்கள். அவர்கள் உடல் மக்கி அந்த மரத்திற்கு உரமாகி மரத்தின் மூலமாக மக்களுக்கு ஆக்சிஜனை கொடுப்பார்கள். அந்த மரத்தை பார்க்கும் பொழுதெல்லாம் அவருடைய ஆன்மா இம்மரத்தில்  வாழ்வதாக நீங்கள் உணர்வீர்கள். இதனால் வீட்டிற்கும் நல்லது , நாட்டிற்கும் நல்லது.

மாசுள்ள உலகில் மாசற்ற காற்றை சுவாசிக்க மரங்களை நடுங்கள்

           மேலும் , பசும்பால் ஒரு லிட்டர் 35 முதல் 40 ரூபாய்  . ஆனால் 1 லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலையும் அதற்கு இணையாக இருக்கிறது. குடிநீரை மட்டும் நாள் ஒன்றுக்கு 90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இன்று உலகில் விற்பனையாகின்றன என்று ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. இந்தளவுக்கு குடிநீரை விற்கும் நிலை வந்து விட்டது. இந் நிலை மாற வேண்டும் என்றால் தண்ணீர் வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் அங்கு மரங்கள் வேண்டும். மரங்கள் வேண்டும் என்றால் மரத்தை ஊன்றுவதற்கு மனிதனிடம் மனங்கள் வேண்டும். மனங்கள் வந்துவிட்டால் உலகமே மகிழ்ச்சி அடையும்.

         மரங்கள் மனிதனுக்கு வெயிலில் இளைப்பாற நிழல் தருகின்றன. மனிதன் பசிக்கு உணவு தருகின்றன. வீடு கட்டுவதற்கு உதவு கின்றன. நோய்க்கு மருந்து தருகின்றான். மனிதன் சுவாசிப்பதற்காகக் காற்றை சுத்தப்படுத்தித் தருகின்றன. மேகங்களிடம் கை விரித்து மனிதனுக்காக மழையைப் பிச்சையாகச் கேட்கின்றன. மரங்கள் மனிதனுக்கு குழந்தைப் பருவத்தில் தொட்டிலாகின்றன. நடை பழகும் பரவத்தில்  நடை வண்டிகளாகின்றன. மணப் பருவத்தில் கட்டிலாகின்றன. வயோதிகப் பருவத்தில் ஊன்று கோலாகின்றன. இறந்து பிறகும் பாடையாகின்றன. மரங்களின் மகிமையை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

மனித நேயத்தை விதைத்து மரங்களை நடுங்கள்

பசுமை பாரதம் பாலைவனம் ஆகலாமா !

மனிதா !
சதைகளைத்தான் புதைத்து விட்டோம் ஆனால் மனங்களை புதைக்கவில்லை மனங்கள் நம்மோடு வாழ அங்கே மரங்களை நடுங்கள் !

மானிட மரணத்திற்கு ஒரு மறு பிறவியை கொடுங்கள் !

நாம் மாறந்தாலும் மரங்கள் நம் பெயர் சொல்லட்டும் !

வெட்டத் துடிக்கும் கைகள் நட துடிப்பதில்லையே !

வளமான தேசம் வறண்டு விடலாமா!

பசுமை பாரதம் பாலைவனமாகலாமா !

வாழ்க வளமுடன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home