பிற நாகரீகங்களில் முத்திரைகள்:
முத்திரைகள் எனும் மெய்ஞ்ஞான விஞ்ஞானக் கலை இந்தியாவிற்கு மட்டும் சொந்தமானதல்ல! உலகின் அனைத்து நாகரீகங்களிலும் இதன் கூறுகளைக் காண முடிகிறது. ஆனால் மேலைநாடுகளில் கிறிஸ்துவ மதம் வேரூன்றியபோது மந்திர, தந்திர வழிகள் அனைத்துமே கிறிஸ்துவ மதக் கொள்கைகளுக்கு ஏதிரானது எனக் கூறி அவற்றைத் தடைசெய்து விட்டனர். காலகட்டத்தில் அந்த மெய்ஞ்ஞான விஞ்ஞானங்கள் அங்கே மறைந்து போயின.
தற்போது ஒரு சில ரகசியக் குழுக்கள் மட்டுமே இந்த தந்திர வழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். பிரீமேசன்ஸ் (fee Masons), ரோசி கூரியன்ஸ் (RosyCurians) போன்ற குழுக்களை உதாரணமாகக் கூறலாம். ஆனால் உலகிலுள்ள அனைத்து மதங்களின் வழிபாடுகளிலும் (அவர்களை அறியாமலேயே) பல மத்திரைகளை இன்றும் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். கிறிஸ்துவ வழிபாடு, இஸ்லாமியர்களின் தொழுகை முறைகளைக் கூர்ந்து நோக்கினால் அவற்றில் பல முத்திரைகள் ஒளிந்திருப்ப தைக் காண முடியும்.
முத்திரைகள் வழியாக நோய்களை அகற்றுவது, நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி என்பதைக் காணும்முன் கீழ்க்கண்ட உண்மைகளை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
* முத்திரைகள் மிகத் தொன்மையான எளிய தந்திர வழிகள்.
* இது மெய்ஞ்ஞானத்தின் மூலமாக நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானக் கலை.
* இதை எவர் வேண்டுமானாலும் எளிதில் கற்றுக் கொள்ளலாம்.
* தொடர்ந்து முறையாகச் செய்து வந்தால் நோயற்ற வாழ்வு வாழ முடியும்.
* மதமோ இனமோ இந்தக் கலையைக் கற்றுக் கொள்ளத் தடையாக இல்லை. இது உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கும் உரிமையுள்ள ஒரு தொன்மையான விஞ்ஞானம்.
* இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வரும்போது நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பது மட்டுமின்றி, தெளிவான உயர்வான சிந்தனை, அமைதியான மனநிலை ஆகியவையும் உருவாகும்.
* ஆன்மிகத்தில் வளர்ச்சியடையவும், ஞான நிலை உருவாகவும் முத்திரை பயிற்சிகள் மிக மிக உதவியாக இருக்கும்.
நோய்களிலிருந்து விடுதலை பெறுவது எப்படி என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள, நோய்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home