Tuesday, 1 March 2016

சூட்சும உலகம்

       நமது ஐம்புலன்களாலேயே நாம்  இந்த உலகை - பிரபஞ்சத்தை உணருகிறோம்; அளக்கிறோம்.  ஆனால் நம் புலன்களுக்கு அப்பால், புலன்களால் ( சாதாரணமாக) உணர முடியாத ஒரு சூட்சும உலகம் உள்ளது. அது முழுக்க முழுக்க சக்திவடிவமானது.

* உடலின் உள்ளே இருக்கும் உயிர் சக்தி
* சக்தியை உருவாக்கும்  சக்கரங்கள்
* சக்தியை சுமத்து செல்லும் நாடிகள்
* உடலை சுற்றி இருக்கும் சக்தி உடல்கள்

         என  நமது பருவுடலின்  உள்ளேயும், அதைச் சுற்றியும் ஒரு சூட்சும உலகம் உள்ளது. இதை புலன்களாலோ, நவின விஞ்ஞானக் கருவிகளாலோ முழுமையாக  அளக்க முடியாது.
       ஆனால் நமது முன்னோர்கள் தங்களது மெய்ஞ்ஞான அறிவினால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கண்டு பிடித்து விட்டனர் என்பதை ஏற்கெனவே கண்டோம். நோய்கள் உருவாவதற்கான காரணங்கள் முழுக்க முழுக்க இந்த சூட்சும உலகிலேயே துவங்குகின்றன. இந்த சக்தி உலகம் குறித்த  புரிதல் இருந்தால் மட்டுமே நோய்களின் மூல காரணத்தைக் கண்டு பிடிக்க முடியும். அதைப் பூரணமாக சரி செய்யவும் முடியும். நவீன ஆங்கில மருத்துவம் இங்கேதான் தோற்றுப் போகிறது, நமது முன்னோர்களின் மெய்ஞ்ஞானம் வெற்றி கொள்கிறது!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home